பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/691

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 669 1887, 1889, 1893 ஆம் ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி.ஆண்டு போடாமல் துந்து பி எனத் தமிழ் ஆண்டு இட்ட பதிப்பும் உள்ளது. எந்த ஆண்டுமே போடாத பதிப்பும் உள்ளது. வேலாயுத முதலியார் என்பவர் 1887 ஆம் ஆண்டிலும், தியாக ராசு சுவாமி என்பவர் 1893 ஆம் ஆண்டிலும், சுப்பிர மணிய சுவாமி என்பவர் 1893 ஆம் ஆண்டிலும், செய்கு அப்துல் காதிர் என்பவர் துந்து பி ஆண்டிலும் பதிப்பித்துள் ←Ꭲ ☾Ꭲ fᎢ . ஆண்டு எதுவும் போடாத ஒரு பதிப்பு என்னிடம் உள்ளது இதன் முதல் பக்கச் செய்தி அதில் உள்ளவாறு அப்படியே வருமாறு: - பிஸ்மில்லாஹி குணங்குடி மஸ்தான் சாஹிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாடல் திரட்டு இஃது, கோட்டாறு-மகாவித்துவான் கா.ப. ஷெய்குத் தம்பிப் பாவலரவர்கள் முன்னிலையில் பிரதிக்கிணங்க B. இரத்தின நாயகர் ஸன்ஸ் வெளியிட்டது. சென்னை-இதன் விலை ரூ.3-50. இவ்வளவு எழுதியவர்கள் ஆண்டு குறிப்பிடாதது வியப் பும் வேதனையும் அளிக்கிறது. இந்தப் பதிப்பில் தொடக்கத்தில் குணங்குடி மஸ்தான் சாஹிபு மீது, திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலை, ஐயா சுவாமி முதலியார் பாடிய தோத்திரப்பா, கீர்த்தனம், வேங்கடராயப் பிள்ளை LITI-u தோத்திரப்பா, சபாபதி முதலியார் பாடிய பஞ்ச ரத்தினம், செய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் பாடிய ஒருபா ஒருபஃது, அவரே பாடிய தோத்திரப்பா, அவரே பாடிய வாயுறை வாழ்த்து-ஆகிய நூல்கள் உள்ளன. இவை யெல்லாம் மஸ்தான் சாகிபு மீது பிறர் பாடிய தொகுப்புகள்.