பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/695

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 673 குமார சம்வாதம், முருகன்- தேவயானை வாதம் பற்றிய 'குமாரதேவ குஞ்சரி சம்வாதம் ஆகியன உள்ளன. இவை, பிராமணர் வீட்டுத் திருமணங்களில் சுமங்கலிகள் பாடுவன வாகும். நவநீத புஞ்சம் - ஆ செய்யிது முகியித்தின் கவிராசர். தொ. கண்ணகுமது மகுதுர முகம்மதுப் புலவர். காட்டியன் அச்சுக்கூடம், சென்னை. 1887, உ - றகுமான் மீது முனாஜாத்து பதிகம், றசூலுல்லாமீது முனாஜாத்து, முகியித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ், திருப் புகழ், நபி நாயக மாணிக்கமாலை- முதலிய நூல்கள். நவநீதம்-புதுமை; புஞ்சம்-குவியல், திரட்டு; அதாவது, நவநீத புஞ்சம் என்றால் புதிய திரட்டு என்பது பொருள். ஞானா வர்த்தக தோத்திராட்டகம் அட்டகம்=எட்டு, இது எட்டு நூல்களின் திரட்டாகும். தொ-ரா. சீநிவாச முதலியார். சுஜந ரஞ்சனி முத்திராட்சர சாலை சென்னை. 1883. நூல்கள்: திரு மந்திரப் பத்து, வாசு தேவப் பத்து, அத்த கிரி யருளாளர் பத்து, பரமோத்திரப்பத்து, இராமாதுசப் பத்து, பார்த்த சாரதி ஊசல், உடையவர் பஞ்ச ரத்தினம், உடையவர் கீர்த்தனைகள் - ஆகிய எட்டு நூல்கள். துரோபதை யம்மை சந்நிதி முறை விளக்கம் ஆ-செளந்தா ராச உடையார். தொ-சந்திர சேகர உபாத்தியாயர். லார்டு ரிப்பன் அச்சுக் கூடம், கும்பகோணம், 1892. நூல்கள் : துபோபதையம்மன் திருமந்திரம், தியான சுலோகம் முதலிய சிறு சிறு நூல்களின் தொகுப்பு. பாடு துறை ஆ - தத்துவ ராயர். தொ-சீர்காழி நமச்சிவாய பிர்மம். வர்த்தமான தரங்கிணி அச்சுக்கூடம், சென்னை-1874. திருவடி மாலை முதல் பல நூல்கள் பல பொருள் பற்றியவை. பல வகைப் பாக்களால் ஆனவை. இந்நூல், முன்பே ஒரு முறை