பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 675 முருகன் தோத்திரங்கள்-ஊசல், கொம்மி, லாலி, பஞ்சகம் முதலியன. - சிங்கப்பூர்ப் பிரபந்தத் திரட்டு ஆ-இராம கு.மெ. மெய்யப்பச் செட்டியார். வெ-முத்தை யச் செட்டியார் மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை. 1900. நூல்கள்- சிங்கப்பூர்ச் சித்திவிநாயகர் நவமணி மாலை, சுப்பிரமணிய சுவாமி பிள்ளைத் தமிழ், "சண்முக மாலை, சுப்பிரமணியர் பதிகம், அங்கயற் கண்ணி மாலை, சுந்தரேசர் திருவிரட்டை மணிமாலை, அநுகூல விநாயகர் மாலை அநுகூல விநாயகர் பதிகம் - ஆகியவை உள்ளன. பழநி சிவ சுப்பிரமணியக் கடவுள் கவித் திரட்டு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வித்தியாவினோத அச்சுக் கூடம். 1879. இதில், மாதப் பாட்டு (பன்னிரு மாதங்கட்கும்) வாரப் பாட்டு (ஏழு நாளைக்கும்), ஆனந்தக் களிப்பு ஆகியவை 32 off GT3 UT. சுப்பிரமணியர் பிரபந்தக் கொத்து வெளியீடு-இராமசாமிச்சுவாமி. மிமோரியல் அச்சுக்கூடம். சென்னை - 1888. நூல்கள் : அருணகிரிநாதரின் கந்தர் அலங் காரம்-கந்தர் அனுபூதி-கந்தர் அந்தாதி, சிவப்பிரகாசரின் செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, சிற்றம்பல நாடிகளின் திருச் செந்தூர்ச் சுப்பிரமணியர் அகவல், குமர குருபரரின் கந்தர் கலி வெண்பா, நக்கீரரின் திருமுருகாற்றுப் படை, தேவ ராயரின் கந்தர் சஷ்டி கவசம்-ஆகியன. அனைத்தும் முருகன் மீது பாடப்பெற்றவை. சோடசப் பிரபந்தம் சோடசம் என்பது 16 என்னும் எண்ணைக் குறிக்கும். 16 நூல்களின் திரட்டு இது. இந்நூல்களின் ஆசிரியர்-முது குளத் தூர் பூ ஆறுமுகக் கவிராயர். கலா ரத்நாகரம் அச்சுக் கூடம், சென்னை. 1899. விநாயகர், முருகன், சிவன், உமாதேவி, அடி யார்கள் ஆகியோரைப் பற்றிய நூல்கள் இவை. பல்வேறு பாவகைகளால் ஆனவை.