பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/700

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


678 - தமிழ்நூல் தொகுப்புக்கலை சங்க இலக்கியம் (எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும்) வெளியீடு:சைவ சித்தாந்த மகா சமாசம், சென்னை. சாது அச்சுக் கூடம்-சென்னை, மொத்தப் பாடல்கள் - 2381. இரு பாகங்கள் எனக் குறிப்பிடப்பட்டு, ஒரே கட்டடம் (பைண்ட்) செய்யப்பட்டுள்ளது. முதல் பாகம்: ஒன்று (1) முதல் 1443 பாடல்கள் வரை; இரண்டாம் பாகம்: 1444 முதல் 2381 வரை. காலம்: ஏப்ரல் 1940. முதலில் பல தொகை நூல்கட்கும் பாரதம் பாடிய பெருந் தேவனார் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் உள்ளன. அடுத்து, புலவர் பெயர்களை அகர வரிசையில் அடுக்கி, அவர வர் பாடல்களை அவரவர் பெயர்கட்குக் கீழே தந்துள்ளனர். அகம்பன் மாலாதனார் முதல் வேம்பற்றுார்க் குமரனார் வரை உள்ள 473 புலவர்களின் பாடல்கள், அவரவர் பாடிய நூற் பெயர்களுடன் தரப்பெற்றுள்ளன. இறுதியில் ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் இறுதியில், பதிற்றுப் பத்து-பரிபாடல் ஆகிய நூல்களின் கிடைக் காத பாடல்கள் சில, புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலி லிருந்தும் உரையாசிரியர்களின் உரைகளிலிருந்தும் கிடைத்தன வாக அமைக்கப்பட்டுள்ளன. பாடல்கள் 1 முதல் 2381 வரை இத்தொகுப்பில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் தொடர் வரிசை எண்ணுக்கு நேராக அந்தந்த நூலின் தொடர் வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மாதிரிக்கு ஒன்று காண்டாம்: 70. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 355. குறுந்தொகை-133. குறிஞ்சி "புனவன் தொடவைப் பொன்போல் சிறுதினைக் கிளிகுறைத்து உண்ட கூழை யிருவி - பெரும்பெயர் உண்மையின் இலையொலித் தா அங் கென்