பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 679 உரஞ் செத்து முளேனே தோழியென் நலம்புத் துண்ட புலம்பி னானே' வரைவு நீடித்த விடத்துத் தலைமகள் சொல்லியது. இந்த அமைப்பில், முதலில் உள்ள 70 என்னும் எண், 473 புலவர்களுள் 70ஆம்புலவர் உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்பதை அறிவிக்கின்றது. அடுத்துக் கீழே உள்ள 355 என்பது, 2381 பாடல்களில் இந்தப்பாடல் 355 ஆம் பாடல் என்பதைக் குறிக்கின்றது. குறுந்தொகை-133 என்னும் எண், குறுந் தொகை என்னும் நூலின் 133 ஆம் பாடல் என்பதைக் குறிக் கிறது. எண்ணையடுத்த 'குறிஞ்சி' என்பது, இந்தப் பாடல் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தது என்பதை அறிவிக்கிறது. பாடலின் இறுதியில் உள்ளது, இந்தப் பாடலின் துறையை அறிவிக்கிறது. இந்தத் தொகுப்பு மிகவும் சிறப்பானது-பயனுள்ளது. தொகுப்பு ஒரு கலை என்பதற்கு இது தக்க எடுத்துக்காட்டாகும். சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) தொகுப்பும் பதிப்பும்: எஸ். வையாபுரிப்பிள்ளை, விற் பனை: பாரி நிலையம், சென்னை. இந்தத் தொகுப்பு இரண்டு பாகங்களாக அச்சிடப்பட்டுள்ளது. இரண்டாம் பதிப்பு: ஆகஸ்ட் 1967. மொத்தப் பாடல்கள் 2381. முதல் பகுதி 1 முதல் 1443 வரை. இரண்டாம் பகுதி 1444 முதல் 2381 வரை. அமைப்பு, மேற் கூறியுள்ள தொகுப்பு போன்றதே. திருச் செந்தூர்ப் பிரபந்தத் திரட்டு தொகுப்பு: மு.ரா. அருணாசலக் கவிராயர். உரை உண்டு. மதுரை இராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை. 1911. நூல்கள் ஆசிரியர் பெயர்களுடன் வருமாறு: திருச் செந்தூர்த் தல புராணம் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை. திருச் செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்-பகழிக் கூத்தர். திருச்செந்தில் நிரோட்டகயமக அந்தாதி-நல்லாற்றுார்ச்