பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/703

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 681 பகம், திரு வீரைப் புராந்தக மாலை, திரு வீரை மரகதவல்லி யம்மை பிள்ளைத் தமிழ், திரு வீரை மரகத வல்லி யம்மை இன்னிசைப் பாமாலை ஆகியன. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு செங்குந்த முதலியார் வகுப்பைச் சார்ந்த சில நூல்களின் தொகுப்பு இது. பதிப்பு: வண்ணக்களஞ்சியம் காஞ்சி நாகலிங்க முனிவர். வெளியீடு: திருவாரூர் தி.க.ச.சபாபதி முதலியார் அட்சய -ஆவணி-1926. சிவகாமி விலாச அச்சுக் கூடம். சென்னை. (அப்போதைய) விலை ரூ.3. இந்தத் திரட்டில் இடம் பெற்றுள்ள நூல்கள் ஆசிரியர் பெயருடனும் பாடல் எண்ணிக்கையுடனும் வருமாறு: 1. ஈட்டி எழுபது-ஒட்டக் கூத்தர்-70. 2. எழுப்பு எழுபது -ஒட்டக்கூத்தர்-70. வெட்டிய தலைகள் உயிர்த்தெழப் பாடியது. 13 பாடல்களே கிடைத்துள்ளன. 3. களிப்பு எழுபது - ஒட்டக் கூத்தரைப் பாராட்டி, அசரீரி, ஒளவையார், கம்பர், புகழேந்தி, அம்பிகாபதி, சோழன், பாண்டியன், சேரன், அஞ்சனாட்சி, சைவாசாரியார் - ஆகியோர்பாராட்டிப் பாடிய பாடல்களின் தொகுப்பு இது. தொகுத்தவர் குலோத்துங்க சோழன் என்பர். ஒட்டக் கூத்தர் செங்குந்தர் ஆதலின், இத்தொகுப்பு இத்திரட்டில் இடம்பெற்றுள்ளது. 4. திருக்கை வழக்கம் -புகழேந்தி பாடியது என்பர் சிலர். 164 அடிக் கலி வெண்பா - 5. (செங்குந்தர்) பிள்ளைத் தமிழ்- ஞானப்பிரகாச - - - முதலியார் 101. 6. கலித்துறை மாலை யந்தாதி-நாகை முத்துக் குமார தேசிகர் (102). 7. தசாங்கம் -சத்திய சந்தர் - 10. 8. ஊசல் முதலியன - மயிலை நாதர் - 28. 9. திரு வொற்றியூர்ச் செங்குந்தர் விநாயக மாலை. படம் பக்க நாதன் - 32. இந்நூல் மட்டும் கடவுள் மீது பாடப் பெற்றுள்ளது.