பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/705

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 683 மூவர் உலா ஆசிரியர் : ஒட்டக் கூத்தர். பதிப்பு ஆசிரியர்: சென்னை அடையாறு பண்டிதர் அ.கோபாலையர். வெளியீடு:செந்தமிழ் மந்திரம் புத்தக சாலை, மயிலை, சென்னை, தி.பி.என். பிரஸ் (The B.N.Press) சென்னை, குரோதன பங்குனி. 25-3-1926. சோழர் மூவரின் ஆசிான் ஒட்டக் கூத்தர். உள்ளுறை: சோழர் மூவர்மீது ஒட்டக்கூத்தர் பாடிய உலா நூல்கள். அவை: விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா. மற்றும் ஒரு பதிப்பு (மூவர் உலா) மேற்கூறிய மூன்று உலாக்களையும் மூவர் உலா என்னும் பெயரில், உ.வே. சாமிநாத ஐயர் மகன் கலியாண சுந்தர ஐயர் பதிப்பித்துள்ளார். வெளியீடு: கலா சேட்திரம், அடை யாறு. சூலை 1946. இப்பதிப்பில் பழைய உரையும் குறிப்புரை யும் உள்ளன. பழநிப் பத்துப் பதிகம் ஆ - கொல்லங்கோடு கு.முத்துசாமிக் கவிஞர். சி.வரத ராசுலு நாயுடு பிரஸ், மதுரை. 1941. பழநி முருகன்மீது, கார்த்தி கேயப் பதிகம் முதல் வலம்புரிப் பதிகம் ஈறாகப் பத்துப் பதிகங்கள் பாடியுள்ளார். கவசத் திரட்டு தொகுப்பும் பதிப்பும் - சிதம்பரம் ஜி. சுப்பிரமணியம். வித்தியானு பாலன யந்திர சாலை, சென்னை, பதினைந்தாம் பதிப்பு - சர்வதாரி-தை. உ- விநாயக கவசம், சிவகவசம், சக்தி கவசம், சரசுவதி தோத்திரம், இலக்குமி தோத்திரம்ஆகியன. * அட்டப் பிரபந்தம் அட்டம் (அஷ்டம்)= எட்டு. எட்டு நூல்களித் திரட்டு இது. ஆசிரியர்: சோழ நாட்டில் திருமங்கை என்னும் ஊரில் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய-தென்கலைப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இவருக்கு அழகிய