பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 - தமிழ் நூல் தொகுப்புக் கலை முதலிய மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்துக் ೧೫r ளப்பட்டும் உள்ளன. இதைக் கொண்டு கிரீக் தொகை நூல் களை தாம் மதிப்பீடு செய்து கொள்ள முடிகிறது. இருபதாம் நூற்றாண்டிலும்: இம்மட்டோடு கிரீக் தொகைநூல்களின் வெளியீட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவதற்கில்லை. இருபதாம் நூற்றாண்டு வரையும் மேலும் மேலும் வெளியீடுகள் செய்யப்பட்டன. மாதிரிக்காக ஈண்டு மூன்று வெளியீடுகளைப் பற்றிக் காண் போம்: (1) மாக்கெய்ல் (1.W.Mackail) என்பவர், கிரீக் தொகை நூல்களிலுள்ள சிறந்த பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, அவற்றிற்கு ஆங்கில மொழி பெயர்ப்பும் தந்து, olutiño (pgårgy sorusth stop.3, Select epigrams from the Greek Anthology' ςτάτgylb @l juifiéù ô. l?. 1890 — ® ®@ தொகை நூல் வெளியிட்டார். இது, 1907 ஆம் ஆண்டிலும் திருத்தமான மறுபதிப்புப் பெற்றது. (2) பேட்டன் (W.R.Paton) என்பவர், சிறந்த கிரீக் தொகைநூற் பாடல்கள் மிகப் பலவற்றை ஐந்து பாகங் களாகத் தொகுத்து, ஆங்கில மொழி பெயர்ப்புடன், Greek Anthology, என்னும் பெயரில் கி.பி. 1916-18 ஆம் ஆண்டு களில் முறையே வெளியிட்டார். (3) முய்ல் மக்சிம் பியர் வால்த்ஸ் (Jules Maxime Pierre Waitz) என்னும் பிரெஞ்சுப் பேரறிஞர், கிரீக் தொகை நூற் பாடல்கள் பலவற்றைத் தொகுத்து, பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன் 1928-இல் வெளியிட்டார். இவ்வாறாக, கிரீக் தொகைநூல் வெளியீடுகள் பல அவ் வப்போது தோன்றி, ஐரோப்பிய மொழித் தொகை நூல்களிடையே தாய்மைச் சிறப்பு பெற்றுத் திகழ்ந்தன. கிரீக் நூல் தொகுப்புக் கலையின் சுருக்கமான வரலாறு இது தான்! இந்த வரலாறுபற்றி ரிச்சர்டு கார்நெட் (Richard Garnett) என்னும் அறிஞர் விளக்கமாக எழுதியுள்ளார்.