பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/711

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நான்கு காலம் 689 கவிராயர். பதிப்பு-மு.ரா. கந்தசாமிக் கவிராயர். மதுரை எக்செல்சியர் பிரஸ், 1917. நூல்கள்-பாபநாசம் என்னும் சிங்கை இறைவன் மீது பாடப்பெற்ற கலித்துறை அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, கொச்சகக் கவிப்பா, சந்த விருத்தம், பிள்ளைத் தமிழ், சிலேடை வெண்பா - ஆகியன. ஞான சம்பந்தர் பிரபந்தத் திரையம் ஆ-காரைக்குடி இராம. சொக்கலிங்கம் செட்டியார். வெ-ஆ. வேலாயுதம் பிள்ளை. 1912. உ-ஞான சம்பந்தர் பிள்ளைத் தமிழ், ஞான சம்பந்தர் போற்றிக் கலி வெண்பா, ஞான சம்பந்தர் திருவூசல்-முதலியன. தேவ கோட்டை மீன லோசனி பிரஸ். - சங்கர நாராயணத் திரட்டு தொ - சுயம் பிரகாச யோகியார். தேவாரம், திருவாய் மொழி ஆகியவற்றிலிருந்து 1100 செய்யுள்கள் எடுத்து, 52 தலைப்புகளாகப் பகுத்து ஆயிரத் திரட்டாகத் தொகுத்தது. தேவாரத்திலிருந்து சங்கரனைப் பற்றிய பாடல்களும்,திருவாய் மொழியிலிருந்து நாராயணனைப் பற்றிய பாடல்களும் தொகுக் கப்பட்டதால், இதற்குச் சங்கர நாராயணத் திரட்டு என்னும் பெயர் தரப்பெற்றது. - முருகர் கதம்பம் பதிப்பாசிரியர்-வீ. சொக்கலிங்கம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு. வாணி விலாச அச்சகம், சீரங்கம். 1965. நூல்கள்: (முருகனை வருக வருக என்று அழைப்பதாக உள்ள) வரு முருகாற்றுப்படை, கதிர்காம வேலவன் தோத்திரம், செந்தில் வேலவன் தோத்திரம், பழநி வேலவன் தோத்திரம், பழநி மாலை, கந்தர் காதல், திருச் செங்கோட்டு அகவல்-ஆகியவை. மன்னர் காலத்தில் சேகரித்த நூல் நிலைய ஒலைச் சுவடிகளி லிருந்து எடுத்த நூல்கள் இவை. சிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தத் திரட்டு திருப்பனந்தாள் காசிமட உதவி வெளியீடு. உ. வே.சா. அவர்களின் ஆராய்ச்சிக் குறிப்புரையுடன், சென்னை கேசரி