பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/712

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 தமிழ்நூல் தொகுப்புக் கலை அச்சுக் கூடம், ஆங்கிரச, ஆடி, உ.வே.சா. முகவுரை நாள்25-7–1932. ஆசிரியர்: தண்டபாணி தேசிகர் மகன் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர். இவர் தஞ்சை-சரபோஜி மன்னரின் அவைப்புலவர். இவர் எழுதிய பல நூல்களுள் மூன்றே இந்தத் திரட்டில் உள்ளன. அவை: 1. கோடீச்சுரக் கோவை, 2. தஞ்சைப் பெருவுடையார் உலா, 3. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி-என்பன. இவர் எழுதி யுள்ள வேறு நூல்கள்: சரபேந்திர வைத்திய முறைகள், சரபேந்திரர் சன்னிரோகச் சிகிச்சைகள், சரபேந்திரர் வைத்தி யம், திருவிடை மருதூர்ப்புராணம், சரசக்கழி நெடில்-முதலி யன. ஆசிரியர் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியினர். பட்டினத் தடிகள் பிரபந்தத் திரட்டு 1934. பட்டினத்தார் பாடல்கள் என்னும் தலைப்பில் இது விளக்கப்பட்டுள்ளது. குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் திருப்பனந்தாள். காசிமட உதவி கொண்டு, உ.வே.சா. ஆராய்ச்சி முகவுரையுடன், சென்னை கேசரி அச்சுக் கூடத்தில், பிரமாதி, ஆவணி-1939 ஆம் ஆண்டு அச்சிட்டு வெளியிடப் பெற்றது. நூல்கள்: 1. கந்தர் கலி வெண்பா, 2. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், 3. மதுரைக் கலம்பகம், 4. நீதி நெறி விளக்கம், 5. திருவாரூர் நான்மணி மாலை, 6. முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், 7. சிதம்பர மும்மணிக் கோவை, 8. சிதம்பரச் செய்யுட் கோவை, 9. பண்டார மும்மணிக் கோவை, 10. காசிக் கலம்பகம், 11. சகல கலா வல்லி மாலை. - 1. மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை, 2. மதுரை மீனாட்சியம்மை குறம், தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை. இத்தொகுப்பு குறித்து உ.வே.சா. முகவுரையில் கூறியிருப் பது வருமாறு: