பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 693 நூல் கிருவலங்கல் திரட்டு' எனப்படும். இந்தத் திரட்டில், ஆறு காண்டங்களின் கீழ் 6666 பாடல்கள் உள்ளன. இதில் பா, பாவினம், சந்தச் செய்யுள் முதலிய பல செய்யுள் வகை களும் இடம்பெற்றுள்ளன. இவர் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார். பாம்பன் குமர குருதாச சுவாமிகள் பாடல் வெளியீடு: பிரப்பன் வலசை தி. உடைய நாயகம் பிள்ளை. பண்டிதமித்திர அச்கக்கூடம், சென்னை. முதல் பதிப்பு - 1901. பல ஊர்க் கடவுள்மேல் பல தலைப்புகளில் குமர குருதாசர் பாடிய நூல்களின் திரட்டு, நூல்களாவன: சிவ சுப்பிரமணியர் சதகம், கந்தர் இரட்டை மணிமாலை, கந்தர் ஒரு பா ஒரு பஃது, கந்தர் நான் மணி மாலை, சிவலோக சுந்தர மாலை, பரஞ்சுடர்க் கண்ணி, பஞ்ச விம்சதி யதிக சத பங்கி - முதலிய நூல்கள். தண்டபாணி சுவாமிகள் திரட்டுகள் திருவாமாத்துார் கெளமார மடாலயம் தண்டபாணி சுவாமிகள் பற்பல திரட்டு நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் சில காண்பாம்: சூரிய மாலை ஞாயிறைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு இது. பதிப்பு: சென்னை த.மு. கந்தசாமி செட்டியார். அச்சு: பி. ஆர் இராமஐயர் அண்ட் கோ பிரின்டர்சு, சென்னை. உள்ளுறை : சூரியமாலை, சூரிய தெரிசனச் சுருக்கம், செளர பரத்துவம் முதலிய ஏழு நூல்களின் தொகுப்பு இது. நான்கு நூல் திரட்டு கொடிப்பள்ளம் ஏழுமலை செட்டியார் பதிப்பு. கலாரத் நாகர அச்சுக் கூடம், சென்னை, ஈசுவர ஆண்டு - மாசித் திங்கள். உள்ளுறை: பொதுநூல், சிறப்பு நூல், திரு வெண்பா விற்பனம் ஆகிய நான்கு நூல்களின் திரட்டு இது. இறுதியில் அருளாட்சி என்னும் தலைப்பில் பாடல்கள் உள்ளன.