பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தீன் தொகை நூல்கள் 47 ஆ.இலத்தீன் தொகை நூல்கள் கிரீக் மொழியின் அளவுக்கு இலத்தீனுக்குத் தொகை நூற் சிறப்பு இல்லையெனினும், ஐரோப்பிய மொழிகளுள் கிரிக்குக்கு அடுத்த பழமையும் பெருமையும் உடைய இலத்தீ னிலும் ஒரு சில தொகை நூல்கள் உள்ளன. கிரீக் தொகை நூல்களின் மாதிரியில் தொகுக்கப்பட்டனவும், கிரீக் தொகை நூல்களின் மொழி பெயர்ப்பாயுள்ளனவும் ஆகிய இலத்தீன் தொகை நூல்களேயன்றி, இயல்பாகத் தொகுக்கப்பட்ட முறையானதொகை நூல்கள் சிலவும் இலத்தினில் உண்டு. சில இலத்தீன் தொகைநூல்கள் வழிநூல் பெருமையும் பெற்றுள்ளன. அஃதாவது:- முதல் நூல்களாகிய கிரீக் தொகை நூல்கள் சில இலத்தீனில் மொழி பெயர்க்கப் பட்டன; இந்த இலத்தீன் வழிநூல்களைப் பார்த்து, இத் தாலியன். பிரெஞ்சு முதலிய மொழிகளில் அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டனர். அதாவது, கிரீக்கிலிருந்து நேரே வராமல், இலத்தீன் வழியாகப் பல மொழிகளில் சார்பு நூல்கள் தோன்றின. எனவே, இப்படியொரு சிறப்பும் இலத்தீனுக்கு இருக்கக் காண்கிறோம். இனி இலத்தீன் தொகை நூல்களைப் பற்றிப் பார்ப்போம். கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த 'guíárgôïò çyj $r$uãïò £J$/6iv, (Quintus Lutatius Catulus) என்னும் பாவலர் முதல், கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தெசிமுஸ் மக்னுஸ் ஓசோனியுஸ் (Decimus Magnus Ausonius), ô]G6Trráúj6iv @(361 rrßuugyaiv (Claudius Clauidanus) gp 56άu uTouavri &git augmJ, 395 [5TJ/ ஆண்டுக் காலத்தில் பலராலும் இயற்றப்பெற்ற இலத்தீன் பாடல்கள் பிற்காலத்தில் பல தொகை நூல்களுள் இடம்பெற்று வெளியிடப்பட்டன. சில தொகை நூல்கள் வருமாறு: கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், ழோன்னெஸ் ஸ்டோ பேயுஸ், (Joannes Stobacus) என்னும் அறிஞர் ஒரு தொகை நூல் உருவாக்கினார். இந்நூலில், செய்யுட்களுடன் உரை நடைப் பகுதிகள் சிலவும் பல தலைப்புக்களின் கீழ்த்தொகுக்கப் பட்டன.