பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 தமிழ்நூல் தொகுப்புக் கலை கள் மிகுதி. இந்தப் பிரதியால், பல நூல்களின் பெயர்களையும், அந்தந்த நூலின் மொத்தச் செய்யுள் எண்ணிக்கையையும் இன்னும் பல செய்திகளையும் அறிய முடிகிறது. பயன் மிக்க திரட்டு. இன்னின்ன பாடல்கள் இன்னின்ன நூலைச் சேர்ந் தன-இன்னின்ன பக்கங்களில் வந்துள்ளன என அறிவிக்கும் மூன்று பக்க அட்டவணை ஒன்று நூலின் முற்பகுதியில் உள்ளது. இது ஒலைச் சுவடிதான். R.2036 தோத்திரத் திரட்டு நயினாசல வரதர் பேரில் விருத்தம் 10, கருடப் பத்து, அழகர் தேவர்-வருகைப் பத்து, கட்டி மகிபாலன் வாழ்த்து, தேசி நாராயணன் மட்டு விருத்தம், வீரக் கவுண்டன் காரிப் பதம், மாகாளியப்பக் கவுண்டன் கொச்சகம், காமாட்சியம்மன் கொச்சகம், இன்னும் பல கொச்சகங்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. இறுதி ஒலைகள் இல்லாததால் நூல் முற்றுப் பெற்ற தாகத் தெரியவில்லை. R.2038 நான்கு மந்திரிகள் கதை இது கும்மிப் பாட்டு வடிவில் உள்ள பாடல்களின் தொகுப்பு. நான்கு மந்திரிகள்: போத ஆதித்தன், போத சந்திரன், போத விபீடணன், போத வியாகரணன், -ஆகியோர். இந்தக் கதை கள் வேறொரு பிரதியில் உரையில் உள்ளனவாம். R,6732 சுப்பிரமணியர் துதி வீர வாகு தேவர் வகுப்பு, சங்க வகுப்பு, சேவகன் வகுப்பு, சுருப வகுப்பு, மயில் வகுப்பு,கவசம்-முதலியவற்றின் தொகுப்பு. யாவும் முருகன் பெருமை கூறுவன. மருத மலைப் பிரபந்தத் திரட்டு ஆ-சிரவண புரம் கெளமார மடாலயம் கந்தசாமி சுவாமி. சிரவணபுரம் கெளமார சபை வெளியீடு. பிரபவ-1927 நூல் கள்: மருதாசலக் கடவுள் அலங்காரம் முதல் வேணுகோபாலர் சந்தப் பதிகம் ஈறாக உள்ள 9 நூல்களின் திரட்டு. மருதமலை முருகர், கணபதி, வேணு கோபாலர் முதலிய அவ்வூர்க் கடவுளர்கள் மீது இயற்றப்பட்ட நூல்கள், -