பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 713 உள்ளுறை: நெஞ்சு விடுதூது, சிகாமணிப் பதிகம், அபிடேக மாலை, அட்டகம், மங்கலம் - ஆகிய நூல்களின் திரட்டு. சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு ஆ-சிவசம்புப் புலவர், தொ-செவ்வந்திநாத தேசிகர். வெ - ஈழ கேசரி ஆசிரியர் நா.பொன்னையா, இலங்கை திருமுருகன் அழுத்தகம், சுன்னாகம் (இலங்கை). உ - பாஸ்கர சேதுபதி கல்லாடக் கலித்துறை, பாஸ்கர சேதுபதி நான் மணி மாலை, பாண்டித்துரைத் தேவர் நான் மணி மாலை, மயில் வாகன வம்ச வைபவம், பருத்தித்துறைக் கலித்துறை, வலவைக் கலித்துறை, பல தனிச் செய்யுள் ஆகியவற்றின் திரட்டு. ஆண்டு 1939. இந்நூலில், அச்சகம் என்பது அழுத்தகம்’ என்று குறிப் பிடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். சந்தானா சாரியர் புராண சங்கிரகம் ஆ - திருவாரூர் சாமிநாத தேசிகர். பதிப்பு-த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை .வெ-திருவாவடுதுறை ஆதீனம். இது, யாழ்ப் பாணம் வண்ணைநகர் சுவாமிநாதப் பண்டிதரது சைவ வித்தி யாது பாலன அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டது. இரண் டாம் பதிப்பு-மாசி, விசுவாவசு. 1951. சைவ சமயத்தில், குறிப்பிட்ட நால்வர் சந்தானா சாரியர் கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்கள் மீது புராணம் பாடப்பட்டுள்ளது. அவையாவன: மெய்கண்டார் புராணம், அருள் நந்தி புராணம், மறை ஞான சம்பந்தர் புராணம், உமாபதி சிவாசாரியார் புராணம் ஆகியவை. இந்நான்கின் தொகுப்பே இது. துவும் மலரே ஆ - ஈழத்துக் குழுஉ இறையனார். தொ-அம்பலத்தான். கலைவாணி அச்சகம், யாழ்ப் பானம். இது, நான்கு கதைப் பாடல்களின் தொகுப்பு. அவை: சீதனக் காதை, விந்தை முதி யோன், பாணர் புரவலன், தீ வெட்டிக் கள்ளர் - ஆகியவை. 1962.