பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/740

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


718 தமிழ்நூல் தொகுப்புக் கலை 2. சர்வதாரி புரட்டாசி. 30.9-1960. நூல்கள்; சன்மார்க்க சித்தியார்; சிவாச்சிரமத் தெளிவு. 3. பிலவ -ஐப்பசி, 19-10-1961. நூல் : சித்தாந்தப் பஃறொடை 4. 1962, நூல்கள்: உபதேசப் பஃறொடை. பஞ்சாக்கரப் பஃறொடை சந்தமிகு தமிழ் மறை நான் பார்த்த பிரதியில் முகப்புப் பக்கம் இல்லையாதலின் தொகுத்தவர்-காலம் முதலிய விவரங்கள் தெரியவில்லை. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூல்கள் சிலவும், தேசிகர் நூல்களிலிருந்து சில பாடல்களும் இதில் உள்ளன. நூல்கள்:இயற்பா (817 பாடல்கள்), முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி, திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந் தாதி, திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமானுசர் நூற்றந்தாதி-ஆகிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், வேதாந்த தேசிகர் இயற்றியுள்ள 24 நூல்களிலிருந்து 405 பாடல்கள் எடுத்துச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்புக்குச் சந்த மிகு தமிழ் மறை” என். னும் பெயர் சூட்டியிருப்பது உள்ளத்திற்கு இன்பம் பயக்கிறது. இவை சந்தத்தோடு பாடுதற்கு மிகவும் ஏற்றவை. திருச்செந்தில் முருகன் சந்நிதி முறை ஆ - முருகைய பங்கஜாட்சி. பதிப்பு - சி. சோமசுந்தரம் பிள்ளை, இரமணாசிரமம், திருவண்ணாமலை. Premier Art Press, Madras, 1963. Qg இரண்டு. பாகங்களாக உள்ளது. முதல் பாகம்-வினை நீக்கப் பதிகம் முதல் பூச்சூட்டல் வரை 52 தலைப்புகள். இரண்டாம் பாகம் - திருப்புகழ்ச் சந்தம்கீர்த்தனங்கள், கண்ணிகள், 'பந்த மெனுமாழி முதல் ‘வாழ்த்து வரை 74 தலைப்புகள்.