பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/742

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


720 தமிழ்நூல் தொகுப்புக்கலை இரண்டாம் பாகம்: பதிப்பு-வெளியீடு-மேற் கூறியனவே. ஆண்டு-1962. உள்ளுறை: 1. தனிப் பாடல்கள்; 2. மொழி பெயர்ப்புப் பாடல்கள்; 3. பதிப்புப் பாடல்கள்; 4. திருத் தொண்டர்கள்; 5. பழகிய பெரியோர்; 6. சிறப்புப் பாயிரங்கள். மொத்தப் பாடல்கள் 441. ஆக இரண்டு பாகங்களிலும் உள்ள மொத்தப்பாடல்கள் 784, இரண்டாம் பாகம் 344 முதல் 784 வரை. சவரி ராயலு நாயகர் பாடல் திரட்டு இவரது நினைவுநாள் விழாமலர். 28-12-1952. ஏஷியன் பிரின்டர்ஸ், சென்னை. வெளியீடு-நாயகரின் குடும்பத்தினர். உள்ளுறை: மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, நீதிபதி வேத நாயகம் பிள்ளை, வித்துவான் சுப்புராயச் செட்டியார், வித்து வான் தி.தியாக ராயச் செட்டியார் முதலியோர் நாயகரைப் பற்றிப் பாடிய பாடல்கள் உள்ளன. மற்றும், நாயகர் பாடிய நூல்களான பேரின்பச் சதகம், பேரின்ப அந்தாதி, பேரின்பப் பாடல்கள், திருமரி-சேசுநாமப் பெருமை, பாகூர் செயராக் கினி மாதா திரு நவச் சதகம், திருக்குருசின் மான்மியம், ஆனந்தக் களிப்பு, சாதகம், உபகார மாதா கண்ணிகள், தேவ தோத்திர சங்கீதக்கீர்த்தனங்கள் (இராகம் தாளத்துடன்)முதலியவை. . நாயகர் புதுச்சேரிக் கிறித்துவர், திரிசிரபுரம் மகாவித்து வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர். மீ.சு.பிள்ளை நாயகர் மீது சவரி ராயலு நாயகர் மாலை என்ற நூலும், தியாகராயச் செட்டியார் சவரி ராயலு இரட்டை மணி மாலை' என்ற நூலும் இயற்றியிருப்பது நாயகரின் பெருமைக் குச் சான்றாகும். அருணகிரி நாதரின் ஆடும் பரி வேல் அணி சேவல் விருத்தங்கள் (திரு வெழு கூற்றிருக்கையுடன்) பதிப்பு; அருளிசை S.V. சுப்பிரமணியன்,-அருட்கவி,