பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 72! S.V. சேதுராமன். அருணகிரிநாதர் சஷ்டி வழி பாட்டுச் சங்கம், திருச் செங்கோடு. பிப்ரவரி 1965. உள்ளுறை: மயில் விருத்தம், வேல் விருத்தம், சேவல் விருத்தம் திருவெழு கூற்றிருக்கை, பழநித் திருப்புகழ். ஆண்டியப்பப் பிள்ளைமீது பிரபந்தங்கள் எட்டயபுரம் க. ஆண்டியப்பப் பிள்ளை மீது பாடிய நூல் களின் தொகுப்பு. ஆசிரியர் - எட்டயபுரம் அவைக்களப் புலவர் க, மீனாட்சி சுந்தரக் கவிராயர். மதுரை விவேகபாது அச்சியத் திர சாலை-1913, நூல்கள்: ஆண்டியப்பப்பிள்ளை பிள்ளைத் தமிழ், ஆண்டியப்பப் பிள்ளை உதார சோதனை மஞ்சரி ஆண்டியப்பப்பிள்ளை மீது தனிக் கவிகள் - ஆகியவை. கவிதை அஞ்சலி m ஆசிரியர்-ந.ரா. முருகவேள். தொகுப்பு-மனசை ப. கீரன், முதல்பதிப்பு-ஜூன் 1967. முருகன் அச்சகம், சென்னை. உள்ளுறை: பல பெரியோர்க்கு அஞ்சலிக் கவிதைகள், செந் தமிழ்க் கவி மலர்கள், மணி விழா வாழ்த்துகள், வரவேற்புகள், கவிதைக் கடிதங்கள், நன்றியுரைக் கவிதைகள், பாராட்டுகள், கையறு நிலைக் கவிதைகள், திருமண வாழ்த்துப் பாக்கள், பல் பொருட் கவிதைகள், பிற்சேர்க்கை-ஆகியன. நூற்றெட்டுத் திருப்பதித் திரட்டு வெளியீடு-கா. அ. சண்முக முதலியார். அமிர்தா அச்சகம். சென்னை. 1963. உள்ளுறை : திருப்பத்துர் கா. அ. சண்முக முதலியார் நூற்றெட்டு வைணவத் திருப்பதிகள் பற்றி இயற் றிய நூற்றெட்டுத் திருப்பதிப் போற்றி அகவல்’ என்னும் நூல் முதலில் உள்ளது. பின்னர், ஆழ்வார்கள் நூற்றெட்டுத் திருப் பதிகள் மீது பாடிய பல பாடல்கள் உள்ளன. அகத்தியர் தேவாரத் திரட்டும் திரு முறைத் திரட்டும் சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்தினரால், சோப கிருது-ஆடித் திங்களில் (சூலை-1903) சென்னை மகாலட்சுமி விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. உள்ளுறை: அகத்தியர் திரட்டிய தேவாரப் பாக்கள் முதலில் உள்ளன.