பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/751

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6-1. பிற் சேர்க்கை-1 எஞ்சிய தொகை நூல்கள் இதுவரை, மேலே, பல்வேறு வ்கைத் தொகை நூல்களின் விவரங்கள் - விளக்கங்கள் தரப்பெற்றுள்ளன. விவரம் கொடுக் கப்படாத தொகைநூல்கள் மேலும் நூற்றுக்கணக்கில் எஞ்சி உள்ளன. அவற்றுள் பல இயன்ற அளவு பின்னால் கொடுக்கப் பெறுகின்றன. இந்நூல்கட்கு விவரம் - விளக்கம் தர இயலா மைக்கு உரிய காரணங்களாவன: - பக்கம்-அளவு நீண்டு கொண்டுபோதல்-மக்களின் வாங்கும் ஆற்றலின் அடிப்படையில் நூலை அமைத்தல். விரிவாக-விளக்கமாக எழுதிக் கொண்டு போவதற்கு உரிய உடல்நலம் இன்மை, எழுத எழுதச் சோர்ந்து போதல். தனி யொருவர் எவ்வளவுதான் செய்ய வியலும்? பல நூலகங்கட்குச் சென்று குறிப்பு எடுத்தபோது, பல நூல்களைப் பற்றிய விவரம் சுருங்கிய அளவில் கிடைத்தல். சில நூல்களின் பெயர்கள் மட்டும் கிடைத்தல், ஆசிரியர் பெயரும் ஆண்டும் மட்டும் சில நூல்கட்குக் கிடைத்தல். வெளியூர்களில் தங்கிக் குறிப்பு எடுத்தபோது, பச்சைத் தண்ணிரில் குளிக்காமலும், காம் சாப்பிட முடியாதாதலால் மோர் சோறு மட்டும் உண்டுகொண்டும் பல நாள் செலவழிக்க முடியாமையால், விரைந்து-விரைந்து நூல்களின் பெயர்களை மட்டும் குறித்துக் கொண்டு வந்தமை, இன்ன பிற காரணங்களால் எல்லா நூல்கட்கும் விவரம்விளக்கம் தர இயலவில்லை. அடுத்த பதிப்பில், இயன்றால், இன்னும் சில தொகை நூல்கட்கு விவரம்-விளக்கம் தர முயல லாம். சில சில்லறைத் தொகை நூல்களை எடுத்துக் கொள் ளாம்ல் விட்டுவிட்டேன். இனி நூல்கள் வருமாறு:- -