பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/774

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

752 - தமிழ்நூல் தொகுப்புக்கலை தெரிந்தே சேர்த்திருக்கலாம். நானூறு பாடல்களுள் ஏதேனும் ஒருபாடலின் அடிகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பின் அதனால் பெரிய குறைபாடு ஒன்றும் இல்லை-என்று நூல் தொகுத்தோர் கருதியிருக்கலாம். மூன்று:- ஒன்பது அடிகட்குக் குறையாமலும் பன்னிரண்டு அடிகட்கு மேற்படாமலும் ஒரு பாடல் கிடைக்காத நிலையில், 'பிரசம் கலந்த' என்னும் 13 அடிப்பாடலின் பொருள் சிறப்பைக் கருதி இப்பாடலை இழக்க உள்ளம் ஒவ்வாமல், எப்படி யாவது இதற்கு இடம் தரவேண்டும் என்று கருதி நற்றிணையில் சேர்த்திருக்கலாம். அங்ங்னமெனில், அப்பாடலில் உள்ள அவ் வளவு பொருட் சிறப்புதான் யாதோ? தமிழரின் சீரிய நேரிய குடும்பக்கலை என்னும் எவரெஸ்ட் கொடுமுடியை அடைவ தற்கு உரிய நீண்ட பாதையில், இப்பாடல், ஒரு பெரிய அளவுக்கல் (மைல் கல்) ஆகும். முதலில் பாடல் முழுவதையும் பார்ப்போமே!; - 110-போதனார் 'பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொன்கலத்து ஒருகை ஏந்திப் புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல் உண்ணென்று ஒக்குபு புடைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரிகரைக் கூந்தல் செம்முது செவிலியர் பரீஇ மெலிங் தொழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள் ஒழுகுநீர் நுணங்கறல் போல பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே" என்பது தேனினும் இனிக்கும் அப்பாடல் ஆகும். பாடலில் பொதிந்துள்ள சுவையான பொருளைக் காண்பாம்;