பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/775

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நற்றிணைச் சிக்கல் 753 வீட்டில் இருந்த செல்வச் சிறுமியை - செல்லச் சிறுமியை உண்ணச் செய்வதற்கே ச்ெவிலித் தாயர் படாத பாடு படுவர்; பால் அருந்தச் செய்வதற்கும் படாத பாடுதான். தேன் கலந்த சுவையான - இனிப்பான பாலை, ஒளி வீசும் பொன் கலத்திலே (பாத்திரத்திலே) இட்டு அந்தக் கலத்தை ஒரு கையில் ஏந்திக் கொண்டு, மற்றொரு கையில் நுனியில் பூங்கொத்து உடைய சிறு கோலைப் பிடித்துக் கொண்டு, அருந்துகிறாயா இல்லையா என்று செவிலியர் அடிப்பதுபோல் பொய்யாகக் கோலை ஒச்சுவர்; சிறுமியோ அருந்த மாட்டேன் என்று கூறி ஒடுவாள்; செவிலியர் அவள் பின்னாலேயே துரத்திக் கொண்டு ஒடுவர், சிறுமியோ, முத்துப் பரல் பொதிந்த பொன் சிலம்பு ஒலிக்கத் தத்தித் தத்தி ஓடுவாள்; நரைத்த கூந்தலுடைய முதிய செவிலியர் துரத்தித் துரத்தி ஒடி ஒடிச் சோர்ந்து போகும் படி ஆட்டம் காட்டிக் கொண்டே பக்கத்தில் உள்ள பந்தருக் குள் ஓடி அருந்த மாட்டேன்-வேண்டா என்று மறுத்துரைப் பாள். இத்தகைய விளையாட்டுச் செல்லச் சிறுமியாய் அவள் இளமையில் இருந்தாள். - - பின்னர் பெரியவள் ஆகத் திருமணம் ஆயிற்று. ஆனால் தன்னை மணந்து கொண்ட கணவன், தன் தந்தையைப் போன்ற செல்வன் அல்லன்; அவன் குடி-குடும்பம் பற்றாக் குறையான வறட்சி உடையதாகி விட்டது. அதனால், பெரிய வளாய் விட்ட இப்பெண், தன்னைக் கட்டிக் கொடுத்த தன் தந்தை வீட்டிலுள்ள செழுமையான உணவை எண்ணுவ தில்லை; தந்தைவீட்டிற்குச் சென்று உண்ணவேண்டுமென்றோ தந்தை வீட்டிலிருந்து தருவித்து உண்டு வாழவேண்டும் என்றோ எண்ணுவதே இல்லை. ஒரு நாளைக்குக் காலை உணவு இராது; இன்னொரு நாளைக்கு மதிய உணவு இராது; மற்றொரு நாளைக்கு இரவு உணவு இராது; வேறொரு நாளைக்குத் தொடர்ந்து இரு வேளை உணவு இராது. ஆங்காங்கே ஆற்றில் மணலைத் திட்டுத்திட்டாக விட்டுச் சிறிய அளவில் தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கும் போது, அறல்