பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/776

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


754 - தமிழ்நூல் தொகுப்புக் கலை என்னும் கரிய மணல் இடைவிட்டு இடை விட்டுத் தெரிவது போல, இந்த்ப் பெண்ணும், தொடர்ந்து எல்லா வேளை களிலும் உணவு கொள்ளாமல், இடைவிட்டு இடைவிட்டுச் சில வேளைகளில் மட்டும் உணவு கொள்கிறாள். போதிய அகவை முதிராவிடினும் உள்ளத்தில் உறுதி உடையவளாய் இருக் கின்றாள். இதை அறிந்த தாய், தேன் கலந்த தீஞ்சுவைப் பாலை வேண்டா வேண்டா என்று கூறித் துரத்தத் துரத்த ஓடிய செல்லப் பெண், இப்போது கணவன் வீட்டில் வேளை தவறி வேளை (பொழுது மறுத்து) உண்கிறாளே-இந்த மூதறி வையும் நிலைமைக் கேற்ற ஒழுக்க நடைமுறையையும் எங்குக் கற்றாளோ? யாரிடம் கற்றாளோ-என்று வியப்பும் வேதனை யும் கொள்கிறாள். -இதுதான் பாடலின் கருத்து. இப்பாடலில், உயர்ந்த குடும்பக் கலையாக மதிக்கத்தக்க சீரிய அறிவும் நேரிய ஒழுக்க மும் விளக்கப்பட்டுள்ளன அல்லவா? இந்தப் பாடலில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும் - ஒவ்வொரு தொடரிலும் சிறந்த நயம் உள்ளது, அதாவது, ஒரு சொல்லையும் நீக்க முடியாத அளவுக்கு, இப்பாடல் சொல் நயமும் பொருள் நயமும் உடைய தாய் உள்ளது. அவை யனைத்தையும் விரிப்பின் பெருகும். இவ்வளவு சிறந்த பாடலை விடுவதற்கு உள்ளம் ஒவ்வாமல் நூல் தொகுத்தவர்கள் இதனையும் நற்றிணையில் சேர்த் துள்ளனர் என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் புரிய வில்லை. அறிஞர்கள் ஆய்க. இதனினும் சிறப்புடையதாய், ஒன்பது-பன்னிரண்டு அடிகட்கு உட்பட்டதாய் உள்ள ஒரு பாடல் எங்கேனும் எப்போதேனும் கிடைப்பின், இப்பாடலை நீக்கிவிட்டு அப் பாடலை நற்றிணையில் அமைத்துக் கொள்ளலாம். அது வரை யிலும் இது நற்றிணையில் இருக்கலாம்.