பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றுக் கருத்து ஆய்வு - 757 காலத்தில் தொகுக்கப்பட்டன - நற்றிணையும் அகநானூறும் சமகாலத்தில் தொகுக்கப்பட்டன - என்றால், இந்த மூன்று நூல்களும் ஒரே காலத்தில் தொகுக்கப்பட்டன என்பதுதானே இதன் பொருள்? இதை வையாபுரியார் முதலில் ஒத்துக் கொண்டு, பின்பு குழம்புகிறார் - குழப்புகிறார். இது தொடர் பாக அவர் எழுதியுள்ளது அப்படியே வருமாறு: "இங்ஙனமாகக் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு என்ற மூன்று தொகை நூல்களும் ஏறத்தாழச் சமகாலத்தன என்பது விளங்கும். எனினும், குறுந்தொகை முற்பட்டும் நற்றிணை இதன் பின்னும் அகநானூறு இதற்குப் பிற்பட்டும் தொகுக்கப்பட்டன என்று ஒருவாறு துணியலாம்’ இவ்வாறு வையாபுரியார் ஒரு நிலையில் நில்லாது முழுகி முழுகி எழுந்து தத்தளித்துள்ளார். அகத்தியலிங்கம்: குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகியவற்றிற்கு முன்னரே பதிற்றுப்பத்து தொகுக்கப்பட்டது-என்பது அகத்திய லிங்கனாரின் கருத்து. ஐங்குறு நூற்றுக்குப் பின்பே புறநானூறு தொகுக்கப்பட்டது என்னும் வையாபுரியாரின் கருத்தை இவரும் ஏற்றுக்கொள்கிறார். நாட்டுப் பற்று: நூல் தொகுப்பில் நாட்டுப் பற்று புகுந்துகொண்டிருந்த தாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. பதிற்றுப்பத்து-ஐங்குறு நூறு-புறநானூறு ஆகியவை சேர நாட்டிலும், குறுந்தொகைநற்றிணை- அகநானூறு ஆகியவை சோழ நாட்டிலும் தொகுக் கப்பட்டன என்ற கருத்து ஒன்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து-ஐங்குறுநூறு-புறநானூறு ஆகியவற்றில் சேரர் தொடர்பு மிஞ்சியிருப்பதால் அவை சேரநாட்டிற்கு உரியன வாகச் சொல்லி, குறுந்தொகை-நற்றிணை-அகநானூறு ஆகிய வற்றைச் சோழநாட்டிற்குத் தள்ளிவிட்டனர். முன்னவை மூன்றும் புறப்பொருள் - பின்னவை மூன்றும் அகப்பொருள் ஆகும்.