பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 53 நூல் படைத்தனர்.இதில் பிரெஞ்சுத் தொகுப்புடன், இலத்தீன்ஆங்கிலத் தொகுப்புக்களும் உடன் சேர்ந்துள்ளன. gử Quảawr (joachim du Bellay) Grcirgojih பிரெஞ்சு அறிஞர், கி. பி. 1522 - 60 ஆண்டுக் கால இடையில் வெடுது @uch g;#GT 56,0pGrrr” (Venetian Andrea Navegero: 1483-1529) என்பவர் தொகுத்த இலத்தீன் தொகை நூலை ondus»-ura# Garsivo, Voeu d' un vanneur de ebi aus vents (காற்றில் கோதுமையைத் தூற்றிக்கொழித்தெடுபவன்து விருப்ப-வெளியீடு) என்னும் பிரெஞ்சுத் தொகை நூலை உரு வாக்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய 'Le Parnasse தொகை நூல் மிகவும் புகழ்பெற்றதாகும். பள்ளிப்பாடல்கள், பல இதழ்ப் (பத்திரிகைப்) பாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பு இது. கி.பி. 1928-இல், முய்ல் மக்சிம் பியர் வால்த்ஸ் (jules Maxime Pierre Waltz) என்பவர், ஒரு கிரீக் தொகை நூலின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை வெளியிட்டார். - இவ்வாறாக, காலத்துக்குக் காலம், பிரெஞ்சுத் தொகை நூல்களுள் சில முதல் நூல்களாகவும், சில வழி நூல்களாகவும், சில சார்பு நூல்களாகவும் தோன்றத் தோன்ற, பிரெஞ்சு நூல் தொகுப்புக்கலை செழித்து வளர்ந்து வரலாயிற்று. கிரீக்-இலத்தீன் தொகை நூல்களைப் போலவே, பிரெஞ்சுத் தொகை நூல்களும் பிற்காலத்தில் பல தொகுதிகளாக வகுத்து அடக்கி வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிவாரி வெளியீட்டுப் பணியைப் பாரிசில் உள்ள 'லரூஸ் நூலகம்’ (Biblio Theque Larousse) செய்துள்ளது. தொகுத்தளித்தவர் கொத்தியெர் ஃபெர்ரியெர் (Gauthier Ferrieres) என்னும் அறிஞராவார். இவர், பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தோன்றியுள்ள தொகை நூல்களை யெல்லாம் எடுத்துக் கொண்டார்; உரைநடைத் தொகுப்புக்களையும் இவர் விட்டாரிலர்; எல்லாத் தொகை