பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்றுக் கருத்து ஆய்வு - 759 திட்டமிடப்பட்டது என்பது.இதனால் புலனாகும். 4-8 அடிநூல் குறுந்தொகை), 13-31 அடிநூல் நெடுந்தொகை எனில், 9-12 அடிநூல், இரண்டிற்கும் இடைப்பட்டதாக ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டுமே என்ற நிலையில் நற்றிணை (நல்+திணை) என்னும் பெயர் பெற்றது. இந்த நேர் வழியை விட்டு வேறுவிதமாக ஆராய்ச்சி செய்வது எதற்காக? இந்த மூன்றையும். குறுந் தொகை - நற்றிணை - நெடுந் தொகை என்றும் வரிசைப் படுத்தலாம்; அல்லது, குறுந் தொகை - நெடுந்தொகை நற்றிணை என்றும் வரிசைப் படுத்த லாம்; அல்லது, நெடுந்தொகை - நற்றிணை - குறுந்தொகை என்றும் வரிசைப்படுத்தலாம். * - முன்னோர் முறை: இங்ங்ன மெனில், யான் நெடுந்தொகை - குறுந்தொகை நற்றிணை என்று வரிசைப் படுத்தியதற்கு உரிய காரண்ம்குறிப்பாக நெடுந்தொகையை முதலில் நிறுத்தியதற்குக் காரணம் முன்னோரின் வரிசை முறையேயாகும். முன்னோர் வரிசை முறை என்றதும், 'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு” என்று தொடங்கும் பாடலைக் கொள்ள லாகாது. இது எதுகை மோனைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட பாடலாகும். இறையனார் அகப்பொருளில் யான் கூறும் வரிசை முறையே உள்ளது. "நெடுந்தொகை முதலாகிய தொகை எட்டும் என்றவாறு' என்னும் பேராசிரியரின் (தொல்-செய்யுளி யல் - 236) உரைப் பகுதியும், "அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம்" என்னும் நச்சினார்க்கினியுரின் (செய்யுளி யல்-236) உரைப் பகுதியும் எனது வரிசை முறைக்குத் துணை புரிந்தன. இது பற்றி முன்னர் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவர்கள் நெடுந்தொகையை முன்வைத்ததற்குக் காரணம், களிற்றியானை நிரை - மணிமிடைபவளம்-நித்திலக் கோவை என மூன்று தனித் தனி நூல்கள்போல் மூன்று பிரிவாகப் பிரிக்கக் கூடிய அளவில், பெரிய பாடல்களை நெடுந்தொகை பெற்றிருப்பதேயாகும்-எனலாம். - - யார் தொகுத்தது? - இந்நூல்களைச் சங்கத்தார் (அதாவது - சங்கத்தோடு