பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/782

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 - ..." தமிழ்நூல் தொகுப்புக் கலை தொடர்புற்றிருந்த அரசரும் புலவரும்) தொகுத்ததாக முன் னோர் கூறியுள்ளனர்: நச்சினார்க் கினியர், மலைபடுகடாம் என்னும் சங்க இலக்கியத்தின் உரையில், இவர் செய்த செய்யுளை (மலை படுகடாத்தை) நல்லிசைப் புலவர் செய்த ஏனைச் செய்யுள் களுடன் சங்கத்தார் கோவாமல் (தொகுக்காமல்) நீக்குவர்; .. அங்ங்ணம் நீக்காது கோத்தற்குக் காரணம், ஆனந்தக் குற்றம் என்பதொரு குற்றம் இச்செய்யுட்கு உறாமையான் என்றுணர்க’ -என எழுதியுள்ளார். பத்துப் பாட்டு நூல்களைச் சங்கத்தார் தொகுத்தார்கள் எனில், எட்டுத் தொகை நூல்களையும் சங்கத்தாரே தொகுத் திருக்கவேண்டும். மற்றும் ஒரு சான்று: போராசிரியர் தொல் - செய்யுளியல் (149) உரையில், "...இனி நூற்றைம்பது கலியும் எழுபது பரிபாடலும் எனச் சங்கத்தார் தொகுத்தவற்றுள்...' என்று எழுதிக் கொண்டு சென்றுள்ளார். நமக்குச் சில-பல நூற்றாண்டு கட்கு முன் வாழ்ந்த இவர்கள் சங்கத்தார் தொகுத்தனர் என்று கூறியிருப்பதைப் புறக்கணிப்பதற்கில்லை. எங்கே தொகுத்தது: சங்கத்தர்ர் தொகுத்தது எனில், சேரநாட்டில் இருந்து தொகுத்தனரா அல்லது பாண்டிய நாட்டில் இருந்து தொகுத் தனரா? பாண்டிய நாட்டின் தலைநகரமாயிருந்ததும் தமிழ் நாட்டின் முதல் பெரிய நகரமும் ஆகிய மதுரையில் இருந்து கொண்டுதான் தொகுத்தனர் என முன்னோர்கள் கூறியுள் ளனர். (சென்னை நகரம் பிற்காலத்தது-மதுரையே தமிழ் நாட்டின் பழம்பெரு நகரமாகும்). - ஞான சம்பந்தர் 'திருப்பாசுரம்' என்னும் தேவாரப்பதிகத் தில், "அற்றன்றி அந்தண் மதுரைத் தொகை ஆக்கினான்’ என்று கூறியுள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில் "கூடல் மாநகரத்துச் சங்கம் வைத்தவன்' என்று பாடியுள்ளார். சேக் கிழார் கூறியிருப்பது, சம்பந்தர் பாடலுக்கு உரிய விளக்க மாகும். இச்செய்தி இந்நூலில் முன்னரே எழுதப்பட்டுள்ளது. இ வ்வளவு தானா? மாணிக்கவாசகர் திருக்கோவையாரில்,