பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/783

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாற்றுக் கருத்து ஆய்வு - 761 'சிறைவான் புனல் தில்லைச் சிற்றம் பலத்தும் என் சிந்தை யுள்ளும் உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீண்தமிழ்" என்று பாடியுள்ளார். பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணத்தில், 'கண்ணுதல் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்' என்று பாடியுள்ளார். எனவே, ஞான சம்பந்தர் 'மதுரைத் தொகை ஆக்கினான்' என்று கூறியுள்ளபடி, தொகைநூல்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தொகுக்கப்பட்டன என்று கூற லாம். சிலருக்கு ஏன் வருத்தம்? சில தொகை நூல்கள் சேர நாட்டிலும் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறிவிட்டுப் போவோமே! - புறநானூற்றின் இடம்: நெடுந்தொகை - குறுந்தொகை-நற்றிணை ஆகியவற்றிற்கு அடுத்த தான நான்காம் இடத்தை, நானும் இறையனார் அகப்பொருள் உரைகாரரும் புறநானூற்றுக்குத் தந்துள்ளோம். ஆனால், ஐங்குறு நூற்றுக்குப் பின்னரே புறநானூறு தொகுக் கப்பட்டது என்பது வையாபுரியாரின் கருத்து. முதல் மூன்று நானூறும் தொகுக்கப்பட்டபோதே - அல்லது அவற்றை அடுத்தே புறநானூறு தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அகப் பொருளில் மூன்று நானூறுகள் தேறியதால், புறப்பொருளி லும் ஒரு நானுறைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்துள்ளனர். எனவே, நான்கு நானுறையும் தொடர்ந்து வரிசைப் படுத்து வதே அழகானதும் முறையானதும் ஆகும். இது முன்னரே விளக்கப்பட்டது. - ஐங்குறு நூற்றின் இடம்: - யானும் இறையனார் அகப் பொருள் உரைகாரரும் புறநானூற்றுக்குப்பின் ஐங்குறு நூற்றுக்கு ஐந்தாவது இடமே தந்துள்ளோம். வையாபுரியாரோ, ஐங்குறுநூற்றுக்குப் பிற் பட்ட இடமே புறநானூற்றுக்குக் கொடுத்துள்ளார்.