பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

762 . தமிழ்நூல் தொகுப்புக் கலை 'ஐங்குறு நூறு' என்னும் பெயரில் உள்ள குறு' என்னும் ஈரெழுத்து மொழியே, ஐங்குறு நூறு பெரிய நூறுகட்குப் பிற்பட்டது என்பதை அறிவிக்கிறது. நானூறு என்பதற்குப் பின்புதான், நானுாற்று ஒன்று...நானூற்றுத்தொண்ணுற்றொன் பது - ஐந்நூறு என எண்ணுவரர்கள். நான்கு நானுறுகளைப் பார்த்ததாலேயே, அடுத்ததாக, ஐந்துநூறு கொண்ட தொகை நூலுக்கு ஐங்குறு நூறு என்னும் பெயர் வைக்கப்பட்டது. ஐங்குறு நூறு என்றால், குறுகிய சிறிய-சிறிய ஐந்நூறு பாடல் களைக் கொண்ட நூல் என்று பொருளாகும். புறநானூற்றுப் பாடல்கள் மிகவும் நீண்டன-பெரியன. ஐங்குறு நூற்றுப் பாடல்களோ, மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லை. யும் கொண்ட மிகவும் சிறிய பாடல்களைக் கொண்டது. முதல் நான்கு நூறுகளின் நீண்ட அடியளவைக் கண்டபின்பே, குறு, என்ற சொல் நூலின் பெயரில் இடம்பெறச் செய்யப்பட் டுள்ளது. எனவே, ஐங்குறு நூற்றுக்கு ஐந்தாவது இடமே பொருத்தமானதாகும். இதுவும் முன்பு விளக்கப்பெற்றுள்ளது. பதிற்றுப்பத்தின் இடம்: இறையனார் அகப்பொருள் உரைகாரரும் யானும் பதிற்றுப்பத்திற்கு ஆறாவது இடம் அளித்துள்ளோம். அகத்திய லிங்கனாரோ அதற்கு முதலிடம் அளித்துள்ளார். வையாபுரியாரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் எழுதியிருக்கும் ஒரு பகுதி அப்படியே வருமாறு: "...புறநானூறு இம் மூன்றிற்கும் (நெடுந்தொகை, குறுந் தொகை, நற்றிணை) பின் தோன்றி யிருக்க வேண்டும் என்றும் விளக்கியுள்ளார். பதிற்றுப் பத்தின் தொகுக்கப்பட்ட காலத் தைப் பொறுத்த வரையில் குறுந்தொகையின் பின் பதிற்றுப் பத்துத் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் எளிதில் புலப்படும். ஐங்குறுநூற்றின் பின்னும் குறுந்தொகை முதலிய வற்றின் பின்னும் தோன்றியது பதிற்றுப் பத்து - இவ்வாறு, வையாபுரியார், பதிற்றுப்பத்துக்கு முதன்மை தரவில்லை. உ.வே.சா., வையாபுரியார், அகத்திய லிங்கனார் ஆகியோர் தங்கட் குள்ளே மாறுபட்டிருப்பதை இது காறும் கூறியவற்றால் அறியலாம்.