பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vi திறம் தொகுப்பியல் நெறியின் வெற்றியே ஆகும். தமிழ்க் கடல் இராய.சொக்கலிங்கனார் காந்தியடிகள் பற்றிப் பல்வேறு காலங்களில் பாடிய பஞ்சகம், அட்டகம், பதிகம், சதகம் முதலிய யாவற்றையும் மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்க னார் கருத்துப்படி காந்திக் கவிதை என ஒரு நூலாகத் தொகுத்தார்கள். இத்தொகுப்பு காந்தியடிகளின் பன்முகப் பெருமையைப் பறை சாற்றுகிறது. அத்துடன் இராய.சொ.வின் தமிழ்ப் புலமையையும் கவிதையாற்றலையும் காந்தியத்தில் உள்ள ஊற்றத்தையும் ஒரு சேர உணர்த்திப் பெருமை சேர்க் கிறது. - பாரதி தன் வாழ்நாளில் தம் கவிதைகள் அனைத்தையும் ஒரே தொகுப்பாகக் காணும் பேறு பெற்றிலன். 1930 களிலே தான் கவிதைத் தொகுதி முழு வடிவம் பெறத் தொடங்கிற்று. பின்னர் பல்வேறு தொகுப்புக்கள் மலர்ந்தன. இன்று மணி வாசகர் பதிப்பகத்தின் செம்பதிப்புத் தொகுப்பு நாடெங்கி லும் உலா வருகிறது. இருபத்தைந்து நூற்றாண்டுகளாக எழுந்த அனைத்துத் தொகுப்புக்களையும் இந்நூல் அளவிடுகிறது; மதிப்பிடுகிறது; திறனாய்வு செய்கிறது. இந்நூலில் தொகுப்பியல் வரலாறு தொகுத்துக் கூறப் பெறுகிறது. தொகுப்புக்கலையின் தோற்ற மும் வளர்ச்சியும் ஆராயப்பெறுகின்றன. நூல்கள் தொகுக்கப் பெற்ற முறையும், தொகைகளின் வகையும், தொகுப்புக் கொள்கையும் ஆராயப்பெறுகின்றன. தொகுப்பியல் உண்மைகள் அனைத்தும் ஒருசேர ஆராயப் பெறுவது இதுவே முதல் முறை. இந்நூலாசிரியர் திரு. சுந்தரசண்முகனார் புதுவைக்குப் புகழ்சேர்க்கும் பெரும் புலவர். ஆராய்ச்சிப் பேரறிஞர். பன்னூல் ஆசிரியர். ஆய்வு நூல்கள் பல எழுதிப் பேரும் புகழும் பெற்றவர். தமிழ்ப் பல்கலைக் கழகத் தொகுப்பியற் கலைத் துறைப் பேராசிரியராகத் திகழ்ந்த பெருமையர். அகராதிக்கலை S. கெடிலக்கரை நாகரிகம் > தமிழ் இலத்தீன்பாலம் x, தமிழ்நூல் தொகுப்புக்களஞ்சியம் போன்ற பெருநூல்கள் தே பெரும்புலவர். அறிவுக்கடல் ஞானியார் அடிகளின்