பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800 தமிழ்நூல் தொகுப்புக் கல்ல எழுதினேன்; ஏராளமான வாழ்த்துப்பாக்களும் வரவேற்புப் பாக்களும் இயற்றித்தந்துள்ளேன்; பின்னரே சிறு சிறு செய்யுள் நூல்கள் இயற்றினேன். எனது முதல் செய்யுள் நூல் 1948 ஆம், ஆண்டு வெளியான தமிழ் அம்மானை' என்பதாகும். பின்னரே சிறு நூல்கள் சில யாத்து வெளியிட்டேன். 1982ஆம் ஆண்டு 'அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் காப்பிய நூலை முப்பது காதைகள் அமைத்து எழுதி வெளியிட்டேன். 1986 ஆம் ஆண்டு கவுதமப் புத்தர் காப்பியம் என்னும் காப்பிய நூலை முப்பது காதைகள் அமைத்து இயற்றி வெளியிட்டேன். இந்த அடிப்படைச் செய்தியை உள்ளத்தில் கொண்டு தொகை நூல்களைப்பற்றி எண்ணிப்பார்க்கின், தமிழ் இலக்கிய வரலாற்றை முதல் முதல் தொடங்கி வைத்தவை தனித்தனி உதிரிகளே - உதிரிகளின் தொகுப்புகளே என்ற உண்மை பெறப் படும். உதிரிப் பாடல்கள் தொடங்கி வைத்ததோடு நில்லாமல் மேலும் தொடர்ந்து கொண்டுள்ளன. வரலாறு, பழமை போலவ்ே திரும்பத்திரும்ப வந்து கொண் to Gégth arosyth &Gäg signioff; History Repeats itself என்னும் ஆங்கில அறிவு மொழி ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது. இதையே இந்தக் காலத்துப் பாவலர்களுள் பெரும்பாலார் செய்து கொண்டுள்ளனர். - 'மீள்பார்வை' என்னும் தலைப்பில் இங்கே கூறப்பட்டிருப் பன, இந்த நூலின் தொகுப்புச் சுருக்கமாகும். κ