பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 59 பட்டு வருகிறது, என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இந் நூற் பாடல்கள் ஆசிரியர் வாரியாக இல்லாமல் தலைப்பு வாரியாகத் தொகுக்கப்பட்டிருப்பினும், பாடல் ஆசிரியர்களின் பெயர்கள் அவர்தம் வாழ்ந்ாள் ஆண்டுடன் அகர வரிசையில் பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது. பயன் மிக்க இந்தக் குழந்தைத் தொகை நூலைத் தொகுத் தவர்கள், ழில்பெர்த் ருழெர், (Gilbert Rouger), ரோபெர்த் ஃபிரான்ஸ், (Robert France) என்னும் இருவருமாவர். இதனை வெளியிட்டவர், ஃபெர்னாந்த்ததன் (Fernand Nothan) என்பவர். ஃஎன்ரி லெழ்ராந்த் (Henri Legrand) என்னும் அறிஞர் இந்த நூலுக்கு அழகிய மதிப்புரை அளித்துள்ளார். இது, பாரிசில் அச்சிடப் பெற்று 1958- மார்ச் திங்களில் வெளி யாயிற்று. இந்த நூலைப்பற்றி நாமே பேசிக் கொண்டிருக்கிறோமே! மதிப்புரை அளித்தவரும், தொகுப்பாசிரியர்களும் என்ன கூறுகின்றார்கள் என்று ஒரு சிறிது கேட்போமே! மதிப்புரையாளர் கூறுவதாவது:- "இந்த நூல் குழந்தை களுக்காகத் தொகுக்கப்பட்டது. குழந்தைத் தொகுப்பு நூல் எப்படி அமைய வேண்டுமோ - அப்படியே அமைந்துள்ளது இந்நூல். பாடல்கள் ஆசிரியர் வாரியாக இன்றிக் குழந்தை கட்கு ஏற்ற தலைப்புவர்ரியாகத் தொகுக்கப்பட்டிருப்பதே, இது சிறந்த குழந்தை நூல் என்பதற்குப் போதிய சான்றாகும். எடுத்துக் காட்டாக, முதல் பெருந்தலைப்பு (Il Est Si Beau L' enfant Avec Son Doux Sourie) குழந்தைகளின் அழகிய் -இளைய - இனிய - இன்பமான- மென்மையான- நகைமுக் மலர்ச்சியுடன் கூடிய இயல்பைப் பற்றியது. இரண்டாவது QuG 55 gweddill (“O Maison De Mon Pere, O MA Maison Que l'Aime') என் தந்தையின் வீடே! நான் விரும்பும்வீடே' என்னும் பெயருடன், குழந்தைகளின் விருப்பமான வீட்டுச் சூழ்நிலையை மையமாகக் கொண்டுள்ளது. இவ்வாறாக, குழந்தைகட்கு ஏற்ற ஒவ்வொரு தலைப்பின் கீழும், அவ்வத் தலைப்புக்கு உரிய பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட சிறந்த பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன...பாடல் தொகுப்புக்கலை