பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 தமிழ்நூல் தொகுப்புக் கலை பட்டுள்ளன...பாடல் தொகுப்புக்கலை ஒரு கடினமான வேலை உயர்ந்த பாவலரின் உள்ளத்தைப் புரிந்து கொள்வது அரிய செயல். பாவலரின் உள்ளத்தின் உணர்ச்சி பாடலில் மறைந்து கிடைக்கும். இத்தகு பாடல்களைத் தொகுப் பவர்கள் தம்ம்ை இழந்து-தம்மை மறந்து இந்த அரிய வேலையில் ஈடுபடுகின்ற னர். குழந்தைகள் பாடல்களைப் பின்னர் மறந்து விடக்கூடும், எனவே, அவர்கள் நினைவில் என்றும் நிற்கக்கூடிய கவர்ச்சி யான பாடல்களை-அவர்தம் பருவம் பட்டறிவு முத்லிய தகுதிகட்கேற்ற பாடல்களை-அவர்தம் வாணாள்முழுதும் பயன்படக் கூடிய பாடல்களைத் தொகுக்க வேண்டும். அந்த அரிய பணியை இந்நூலின் தொகுப்பாசிரியர்கள் அருமையாகப் புரிந்துள்ளனர்...' - இந்தக் கருத்துப்பட, இன்னும் பல செய்திகளை மதிப் புரையாளர் கூறிச் செல்கிறார். அடுத்து, தொகுப்பாசிரியர் கள் கூறியிருப்பதாவது: “...... இந்த நூற்பாடல்களைச் சிறு பிள்ளைகள் முதல் பெரிய பிள்ளைகள் வரை (உயர்நிலைப் பள்ளிப் பிள்ளைகள் வரை) படிக்கலாம். பாடல்கள் பயனும் கவர்ச்சியும் மிக்கன வாய் இருக்கவேண்டும் எனத் திட்டமிட்டு அவ்வாறே இந் நாலைத் தொகுத்துள்ளோம். பன்னிரண்டு தொகுப்புக்களில் 200 பாடல்களும், பின்னிணைப்பில் 8 பாடல்களும் அமைத்துள் ளோம். பாடல்கள் நடையில் பல்வேறு வகையானவை; குழந்தை களின் உணர்வைத் தட்டி எழுப்பக் கூடியவை ...... ஒவ்வொரு பாடலுக்கும், அந்தப் பாடலின் கருத்தை உள்ளடக்கிய எழுச்சி மிக்க ஒரு தலைப்புத் தரப்பட்டுள்ளது. திறமை, வீரம், கலை யுணர்வு போன்றவற்றை உணர்த்தும் சொற்களே.சொற்றெடர் களே தலைப்புக்களாக உள்ளன. பாடல்களிலுள்ள சிறந்த தொடர்களும் தலைப்புக்களாகத் தரப்பட்டுள்ளன...... * x இந்தக் கருத்துப்பட இன்னும் பல கூறியுள்ளனர். பயன் மிக்க இந்த நூல் பாராட்டற் பாலது. அடுத்து மூன்றாவது தொகைநூல் வருமாறு: