பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 61 3. The Harrap Anthology of French Poetry இந்த பிரெஞ்சுத் தொகை நூலின் பெயர் ஆங்கிலத்தில் தரப்பட்டிருப்பது வியப்பாயிருக்கலாம். ஆம்! இஃது ஆங்கி லேயர்கள் படிப்பதற்காகத் தொகுத்தளிக்கப்பட்ட பிரெஞ்சுப் பாடல் தொகைநூலாகும். அதனால்தான், நூற் பெயரும், முன்னுரையும்,மற்ற விவரங்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள் ளன. மற்றப்படி, நூலின், உள்ளுறை-அதாவது பாடல்கள். பிரெஞ்சு மொழியிலேயே இருக்கக் காணலாம். இந்நூலைத் தொகுத்து உருவாக்கியவர் ஜோசப்ச்சியாரி' (Joseph Chiari D.e.s. L.) srairuart. 95, 9)svaja Laisvrsirsт George G. Harrap & Co Ltd, என்னும் நிறுவனத்தால். <gI*8)LG) Qausinu?u-L? Quựi)ự0,5mrải “The Harrap Anthology" என்று வழங்கப்படுகிறது. இலண்டனில் 1958 ஆம் ஆண்டு இந் நூல் முதலவதாக அச்சிடப்பட்டது. இத்ன் தொகுப்பாசிரியர் ஒரு நீளமான பெரிய முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன் னுரையின் உரிமை பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கொண்டு, அதன் அருமை பெருமையை அறியலாம். இங்கே, இதுவரை நாம் மாதிரிக்காக எடுத்துக் கொண் டுள்ள மூன்று பிரெஞ்சுத் தொகைநூல்களுள் முதலாவது பெரியவர்கட்கு ஏற்றது; இரண்டாவது சிறார்கட்கு உரியது. இந்த மூன்றாவது நூலோ, அனைவர்க்கும் ஏற்ற பொதுவான நூல். என்று தொகுப்பாசிரியரால் முன்னுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனவேதான், வகைக்கு ஒரு நூலாக மூன்று நூல்கள் இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றன. முதலி ரண்டு நூல்களும் பிரெஞ்சுக்காரர்கள் படிப்பதற்கு உரியன; இந்த மூன்றாவது நூல் ஆங்கிலேயர்கட்காகத் தொகுக்கப் பட்டது. இப்படியும் ஒரு முறை உண்டு என்பதை அறிவிப்பதா கவே இந்த மூன்றாவது நூல் இங்கே எடுத்துக் காட்டப்படு கிறது. இந்த நூலின் தொடக்கத்தில், பதினோராவது நூற்றாண் டின் தொடக்கத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிற -offluff Quus; GA, fluro (Anonymous Eleventh or early