பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


62 தமிழ் நூல் தொகுப்புக் கலை Twelth century) மூன்று பாடல்கள் தரப்பட்டுள்ளன. அடுத்து, பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட வையான - ஆசிரியர் பெயர் தெரியாத மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆறு பாடல்களை அடுத்து, எண்பத்தெட்டுப் பாவ லர்களின் பாடல்கள் பாவலர் பெயருடன்தொகுக்கப் பட்டுள் orso. apgå, umalai, ‘Richard Coeur De Lion' (1157–99) என்பவர். எண்பத்தெட்டாவது பாவலர், Yves Bonnefoy' (1923) என்பவராவார். இந்நூற்பாடல்கள் ஆசிரியர் வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அடுத்து, நாலாவது மாதிரி நூல் ஒன்றையும் சுவைக் கலாமே! 4. Les Poe “mes De L’ Annee 1970 மேலுள்ள நூற்பெயர், 1970 ஆம் ஆண்டுப் பாடல்கள்’ என்னும் பொருளைக் குறிக்கிறது. இதனைத் தொகுத்து வெளி யாக்கியவர் செழேர் (Seghers) என்னும் அறிஞர். இந்த நூலுக்கு 1970 ஆம் ஆண்டுப் பாடல்கள் எனப் பெயர் கொடுக்கப்பட்டிருப்பினும், 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாளுக்கும்-1969 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் முதல் நாளுக்கும் இடைப் பட்ட ஓராண்டுக் காலத்தில், பல்வேறு இதழ்கள், மலர்கள் முதலானவற்றில் வெளியான பாடல்களை இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் 1970 ஆம் ஆண்டு மேத் திங்கள் 15ஆம் நாள் பாரிசில் அச்சிடப்பட்டு வெளியாயிற்று. 1969 அக்டோபரில் பாடல்கள் தொகுக்கும் வேலையைத் தொடங்கி, 1970 மே 15 ஆம் நாள் அச்சிட்டு வெளியாக்கும் வேலையை முடித்துள்ளனர். ஏறக் குறைய ஏழு அல்லது எட்டுத் திங்கள் காலம் இதற்குச் சரியாய் இருந்திருக்கும். 1968-69 ஆம் ஆண்டுகளில் பாடல்கள் இயற்ற பட்டிருப்பினும், நூல் 1970 ஆம் ஆண்டில்தான் வெளியாகி அனைவர் கைக்கும் கிடைத்ததால் 1970 ஆம் ஆண்டுப் படை யல்-1970 ஆம் ஆண்டு அளிப்பு என்னும் பொருளில், 1970 ஆம் ஆண்டுப் பாடல்கள்’ என நூலுக்குப் பெயர் தரப்பட்டது போலும். -