பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 63 இந்நூலில், Jean L' Anselme' என்னும் புலவர் முதல் “Alexandre Voisard’ srcingo ih Ljavait fr/prts, எண்பதின்மர் (80 புலவர்) பாடல்கள் ஆசிரியர் வாரியாகத் தொகுக்கப்பட் டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கும் உரிய தலைப்பு தரப்பட் டுள்ளது. ஒராண்டுகாலப் பாடல்களின் தொகுப்பாகிய இந் நூல் ஒரு புது மாதிரியாக உள்ளதன்றோ? இப்படியும் ஒரு மாதிரி உண்டு என்பதை அறிவிக்கவே இந்தத் தொகை நூல் ஈண்டு எடுத்துக் காட்டபெற்றது. ஈ. ஆங்கிலத் தொகை நூல்கள் கிரீக் மொழியில் கி.மு. முதல் நாற்றாண்டிலேயே முதல் தொகைநூல் தொகுக்கப்பட்டது. எனினும், இன்று அனைத் தலகப் பொது மொழியாக ஆட்சி செலுத்திவரும் ஆங்கிலத் தில், பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தான் முதல் தொகை நூல் வெளியாயிற்று. 1320 - இல் எழுதப்பட்ட 'Harely Manuscript" grcirgyib ao 5 Qu@p551-Liqu?¿, பிரெஞ்' சுப் பாடல்களுடன் பல ஆங்கிலப் பாடல்களும் இருந்தது உண்மை. 1375 - இல், சோலொமொன் (Solomon) என்பவர், இலத்தீன் பிரெஞ்சுப் பழமொழிகளுடன் ஆங்கிலப் பழமொழி களையும் தொகுத்து வெளியாக்கியதும் உண்மை. ஆயினும், சிறந்த ஆங்கிலப் பாடல்கள் முதல்முதலாகத் தனித்த நிலை யில்-தனித் தொகைநூலாகத் தொகுக்கப்ப்ட்டு வெளியானது பதினாறாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேதான். கி.பி. 1557-இல், டாட்டால் (Tottel) என்னும் அறிஞர் ஆங்கிலப் Littl issir Laval ösm pÅ GÆrø #ğı, “Book of Songs and Sonnets” என்னும்பெயரில், முதல் ஆங்கிலத் தொகைநூலை வெளியாக்கினார். இத் தொகை நூலுக்கு, Tottel s Miscellany” என்ற வேறு பெயரும் உண்டு. இந்தப் பெயர்தான் பின்னர்ப் பெரிதும் நிலைத்துவிட்டது. Miscellany என்றால், # Gü) ❍Ꭷll • கதம்பம் - தொகுதி ஏடு-தொகுப்பு நூல் - என்று பொருளாம். பல்வேறு பாவலர்களின் பல்வேறு பாடல்களை டாட்டல் தொகுத்து வெளியிட்டதால், இந் நூல் Tottel's Misceilany எனப் பெயர்பெற்றது.