பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 65 இதில் இரண்டாவது ரிச்சர்டு மன்னன் காலம் முதல், நான் காவது எட்வர்டு மன்னன் காலம் வரையிலான (from Richard IIto Edward IV) ஆங்கில நாட்டு வரலாற்றை, அடிப்படையா கக் கொண்டு பாடலாக எழுதப்பட்டுள்ள பத்தொன்பது வர் லாற்றுப் பகுதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத் தொகை நூல் ‘சாக்வில் (Sackville) என்பவர் இயற்றிய மிகச் சிறந்த. உணர்ச்சிமிக்க - இன்பமான - எதுகை மோனை ஒலிநயம் நிறைந்த Induction என்னும் பாடல் பகுதி இணைக்கப்பெற்று 1563 - இல் புதிய பதிப்பாக வெளியாயிற்று. இவ்வாறாக், இந் நூல், 1621- ஆம் ஆண்டுவரை, மேலும் மேலும் பல புதிய பகுதிகள் சேர்க்கப் பெற்றுப் பலமுறை பதிப்பிக்கப்பட்டுச் சிறப் புற்றுவந்தது. 6.13. 1593-Qā’, ‘The Phoenix Nest' origiš Qārśns நூல் தோன்றியது. Phoenix Nest என்றால், இறந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்த பறவைகளின் இருப்பிடம் என்பது பொரு ளாம். அப்படியெனில், மறைந்து போன-மறைந்து போகக் கூடிய நிலையில் இருந்த பாடல்களின் திரட்டு இந்நூல் என நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்நூல் தொகுக்கப் பெறர் திருந்தால், இந்நூலில் உள்ள பாடல்கள் பிற்காலத்தினருக்குக் கிடைத்திருக்கமாட்டா. - 6.13. 1600-Qā Garcious ‘England's Helicon'. என்னும் நூல், பலரும் அறிந்து பாராட்டுகிற - மிகவும் சிறந்த ஆங்கிலத் தொகை நூலாகும். Helicon என்பதற்கு, பாடல் ஊற்றின் பிறப்பிடம் (தலை ஊற்றுவாய்) என்று பொருளாம். எனவே, இத் தொகைநூல், ஆங்கிலப் பாடல்கட்குப் பிறப்பிடமாயுள்ள பெருமையுடையது என அறியலாம். அந்தக்கால நாட்டுப்புற வாழ்க்கையை ஓவியப்படுத்திக் காட்டும் பாடல்களையும், பல் வேறு சுவையுணர்வு மிக்க பாடல்களையும் இந் நூலில் காண லாம். இந்நூற் பாடல்கள், பாவலர்கள் பலர் பாடிய பல நூல் களிலிருந்து திரட்டியவையாகும். பர்த்தலோமவ் யங் (Bartho -lomew Young) என்பவரின் பாடல்கள் இந்நூலில் மிகுந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளன. - இவர் பாடல்கள், மோந்தெமயொர், (Montemayor)