பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


72 தமிழ் நூல் தொகுப்புக் கலை தொடர்புடையனவாயுள்ளன. மற்றும், ஒவ்வொரு பாடலும் தோன்றுவதற்குக் கருப்பொருளாக உள்ள ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்ச்சிக்கிடையேயும் பொதுத் தொடர்பு உள்ளது. இந்த முறையில் பாடல்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன என்று தொகுப்பாசிரியர் கூறுகிறார். மற்றும், பாடல்களைக் கால வாரியாக வகைசெய்து வரிசைப் படுத்துவது, உப்புச் சப்பற்ற - 2 of 39 usi, p 6205 (p68) spurröth (Wooden Classification of Chronology) என்றும் அவர் தமது முன்னுரையில் கூறி யுள்ளார். இஃது ஒருசார் புதுமைக் கருத்தாகும். எனவே, இந்நூலில், ஒரு பாவலரின் பாடல்கள் பலவும் பல இடங்களில் சிதறிக் கிடக்கக் காணலாம். எடுத்துக் காட் டாக, யீட்ஸ் (W.B. Yeats) என்பவரின் பதினொரு பாடல் கள் 42, 57, 64, 87, 105, 108, 116, 141, 145, 172, 175 ஆகிய பதினொரு பக்கங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடப்பதை நூலைக் கற்போர் நன்கறிவர். பல நூல் களிலும் உள்ளாங்கு, இந்நூலின் இறுதியிலும், ஆசிரியர் அகர வரிசையும், செய்யுள் முதற் குறிப்பு அகர வரிசையும், பக்க எண்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறின், இந்நூலின் அமைப்பு மிகவும் நன்றாயிருக்கிறது. உ. சம்சுகிருதத் தொகை நூல்கள் சம்சுகிருதம் என்னும் வடமொழியில், தொகை நூல் என்பது, சுபாஷிதம்' எனப் பெயர் வழங்கப்படுகிறது. சு’ என்றால் நல்ல என்று பொருளாம். பாஷிதம்' என்பது ‘பாஷா (மொழி) என்னும் அடிப்படையிலிருந்து உருவானது. எனவே, சுபாஷிதம்' என்பதற்கு, நன்மொழிகளின் திரட்டுஅதாவது - நல்ல பாடல்களின் தொகுப்பு’ எனப் பொருள் @gmr&ir676) Tib, &6ir@,Dictionarium-Latino-Gallico Tamulicum” என்னும் இலத்தீன்-பிரெஞ்சு-தமிழ் அகராதியில் Anthologium’ «TsitsDjib Gord) 2/33, “Anthologi um, i, n. Anthologie, நல்ல வாக்கிய முதலியதின் சேர்க்கை,-மாலை' எனப் பொருள் கூறப்பட்டிருப்பது ஒப்பு நோக்கற்பாலாது. வடமொழித் தொகை நூல்கள் சில, சுபாஷிதம் என்னும் பெயரைக் கொண்டிருப்பதைப் பின்னர்க் காணலாம்.