பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


74 தமிழ் நூல் தொகுப்புக் கலை பாடல்களாகிய மணிகளால் தொகுக்கப்பட்ட மாலை எனக் கொள்ளலாம். இதனைத் தொகுத்தவர் நந்தனா என்பவர் 'சிவ விராஜ்யா என்னும் புலவரின் பாடலிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. - 'தர்ம பரீக்ஷா என்னும் சிறந்த நூலின் ஆசிரியராகிய 'அமிதகதி’ என்னும் புலவர், முஞ்சா (Munia of Dhara) என்னும் அரசன் காலத்தில் கி.பி. 994-இல், சபாஷித ரத்த சந்தோகா என்னும் நூல் தொகுத்தார். சந்தோகா என்றால் குவியல். எனவே, நன்மொழி மணிக் குவியல்' என்பது நூற் பெயரின் பொருளாகும். 'சிரீதர தாசா என்பவர் கி.பி. 1205-இல், சதுக்தி கர்ணா மிருதா என்னும் தொகைநூல் உருவாக்கினார். சதுக்தி என்றால் நன்மொழி-நல்லறிவுரை என்று பொருளாம். கர்ணா மிருதம் என்றால் செவியமிழ்தம் ஆகும். 'ஜல்கனா’ என்பவர் கி.பி.1257-இல் சுக்தி முக்தாவளி என் னும் நூல் தொகுத்தார். சுக்தி = கிளிஞ்சல்; முக்த ஆவளி= முத்து வரிசை; எனவே, சுக்தி முக்தாவளி என்றால், கிளிஞ் சலும் முத்தும் சேர்ந்த தொகுப்பு என்று பொருளாம். அஃதா வது, பலவகைப் பாடல்களின் தொகுப்புநூல் என்று கொள்ள வேண்டும். 1257-இல் சுபாஷித முக்தாவளி’ என்னும் பெயருடைய நூலும் தொகுக்கப்பட்டது. இதே பெயரில் இத்தொகை நூலின் சுருக்கம் ஒன்றும் உள்ளது. 'காலிங்கராயன்' என்பவர் 'குலசேகர சுக்தி ரந்ந ஹாரா' என்னும் நூலொன்று தொகுத்தார். அறம், பொருள், இன் பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களைப் பற்றிப் பேசும் பாடல்கள் இதில் உள்ளன. வேத பாஷ்யம்' என்னும் படைப்பின் ஆசிரியராகிய, 'சாயணர் என்னும் பெரியார், பதினான்காம் நூற்றாண்டில், ‘சுபாஷித சுதாநிதி என்னும் தொகைநூல் தந்தார். சுதாநிதி