பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 தமிழ் நூல் தொகுப்புக்கலை ஒன்ருல் மட்டுமே அறியப்படுகிறது. இந்தப் பாயிரச் செய்யுள் முன்பே ஓரிடத்தில் கொடுக்கப்பட்டிருப்பினும், குறிப்பிட்ட தொரு பயனுக்காக ஈண்டு இன்னொரு முறை வருமாறு: வீங்குகடல் உடுத்த வியன்கண் ஞாலத்துத் - தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வாளுேர் ஏத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆளுப் பெருமை அகத்தியன் என்னும் அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் நல்லிசை கிறுத்த தொல்காப் பியனும்’ என்பது வரைக்கும்ே பேராசிரியர் தந்துள்ளார். தொல் காப்பியர் அகத்தியரது நூலைக் கற்றவர் என்னும் செய்தியை மட்டுமே குறிப்பிடும் நோக்கங் கொண்ட பேராசிரியர், இந்தச் செய்யுளைத் தொல்காப்பியரோடு நிறுத்திக் கொண் டார். ஆளுல், இச் செய்யுள் தொல்காப்பியரோடு நின்று விடவில்லை. தொல்காப்பியரைத் தொடர்ந்து மற்றப் புலவர்கள் பதிைெருவரின் பெயர்ப் பட்டியல் நீண்டு கொண்டு போகிறது. தமக்கு அந்தப் பட்டியல் கிடைக்க வில்லை. முழுச் செய்யுளும் பேராசிரியருக்குக் கிடைத் திருந்தும், அவருக்கு வேண்டிய பகுதியோடு அவர் நிறுத்திக் கொண்டது நமது தீப்பேறே! தமக்குப் பின்னல் இந்த நூல் கிடைக்காமல் மறைந்துபோகும் என்பது பேராசிரியர்க்கு அப்போது எவ்வாறு தெரியும்? தெரிந்திருந்தால் முழுப் பாடலையும் கொடுத்தாலும் கொடுத்திருப்பார். இச் செய் புளில் உள்ள, - -, i. பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் கல்லிசை நிறுத்த தொல்காப் பியனும் ” என்னும் இரண்டடிகளில் உள்ள உணர்ந்தோர்’ என்னும் பன்மைச் சொல்லையும், தொல்காப்பியனும் என்னும் ஒருமைச் சொல்லையும் ஊன்றி நோக்கவேண்டும். அகத்தி கவனது முதல்நூலை உணர்ந்தோர். பலர்; அவராவார் தொல் காப்பியனும் அந்தப் புலவனும் இந்தப் புலவனுமாகப் பன்னிரு பட்லம்" பன்னிருவர் என்பதாகத் தொல்காப்பியனிலிருந்து பட்டியல் தொடங்குகிறது, என்பதை இச் செய்யுள் அமைப்பு அறிவிக் கின்ற தல்லவா? எனவே, உண்ர்ந்தோர்’ என்னும் பன்மையும், தொல்காப்பியன்’ என்னும் ஒருமையும், தொல் காப்பியனும் என்னும் சொல்லின் இறுதியில் உள்ள எண்ணும்மையும், "அகத்தியரது முதல் நூலைக் கற்றவர் களாகிய தொல்காப்பியனும் பிறரும்ாகச் சேர்ந்து பன்னிரு பட்ல்ம் இயற்றினர் என்னும் கருத்தை நாம் உய்த்துணரும் படிச் செய்கின்றன. . . . . 玄 - مهمته பராசிரியரால் தரப்பட்டிருப் இந்தச் செய்யுள் முழுதும் ே பின், பன்னிருவர் என்ற எண்ணிக்கையும், பன்னிருவர் பெயரும் கிடைத்திருக்கலாம். இந்த வாய்ப்பு இன்மையால், இதன் வழிநூலாகிய புறப்பொருள் வெண்பர் மாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் உள்ள் தொல்காப்பியன் முதல் & பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த படலம்" என்னும் பகுதியால்தான் "பன்னிருவர் என்னும் எண்ணிக்கை நமககுத் தெரிய வந்துள்ளது. எனவே. - இந்த இரு நூல்களின் பாயிரச் செய்யுள்களும் இணைந்து, பன்னிரு படல ஆசிரியர்கள் தொல்காப்பியன் முதலிய பன்னிருவர்" என்னும் செய்தியை மட்டும் தெரிவித்துள்ளன. இனி, இந்தப் பன்னிருவர் யார் யாராக இருக்கலாம் என்று பார்ப்போமே! - . அகத்தியனரின் மா ளு க் க ர் க 3ள த் தெரிவிக்கத் தொடங்கிய அபிதான சிந்தாமணி ஆசிரியர், இவர்தம் மாளுக்கர்கள் தொல்காப்பிய முனிவர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பியன். பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கை பாடினியன், நற்றத்தன், வாமனன் முதலியவர்கள்”, என்று கூறி யுள்ளார்; அஃதாவது, - குறிப்பிட்ட "பன்னிருவரைப் பெயர் குட்டிச் சிறப்பாகவும், மற்றையோரை முதலிய வர்கள் என்பதில் அடக்கிப் பொதுவாகவும் கூறியுள்ளார். இவ்வாறே இன்னும் சிலர் அகத்தியரின் மாளுக்கர்களைக் குறிப்பிட்டுள்ளனர். "முதலியவ்ர்கள்’ என்னும் சொல்லைக் f -183 3.