பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தமிழ் நூல் தொகுப்புக் கை அதுவே, அகவலின் வருமென அறைகுநர் புலவர் ' - பத்துப் பாட்டின் பாடல்கள் நூறு அடிக்குக் குறையா மலும், ஆயிரம் அடிக்கு மிகாமலும், பெரும்பாலும் ஆசிரியப் பாவால் வரும் - என்பது கருத்து. இந்தப் பத்துப் பாட்டுக் களும் இன் னின்னவை என்பதை, முருகு பொருகாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. ” என்னும் பழைய வெண்பாவால் அறியலாம். இனி, ஒவ்: வொன்றையும் பற்றித் தனித்தனியே காண்போம் : 1. திருமுருகாற்றுப்படை : g zeF :.ெ : ா , 317 அடிகள் கொண்ட, ஆசிரியப்பாவால் ஆன இந்தப் பாடலின் ஆசிரியர் நக்கீரர். முருகனை வழிபட்டு அருள் பெற்ற ஓர் அன்பன், எதிர்வந்த மற்ருேர் அன்பனை நோக்கி, முருகனே இன்னின்ன இடத்திலெல்லாம் சென்று, இன்னின்ன முறைப்படி வழிபடின் அருள் பெறலாம் என அவனே ஆற்றுப் படுத்துவதாக (வழிப்படுத்தியனுப்புவதாக) உள்ளது இந் நூல். இதில் முருகனது சிறப்பும், ஆறுபடை வீடுகளும், முருகன் தொடர்பான 1Ꮧ ❍ செய்திகளும் விளக்கப் பட்டுள்ளன. 2. பொருநர் ஆற்றுப்படை 248 அடிகளையுடைய இடையிடையே வஞ்சியடி’ கலந்த ஆசிரியப்பாவால் ஆகிய இந்நூலின் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். பரிசு பெற்ற பொருநன் ஒருவன் , மற்ருெரு பொருநனைச் சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தி யனுப்புவதாக அமைந்துள்ளது இந் நூல். இதில், கரிகாற்பெருவளத்தான் சிறப்பும், இசை 10ாண்பும் பிறவும் இயம்பப்பட்டுள்ளன. (பொருநர் = ஆடிப்பாடுபவர்} கடைச் சங்க காலம் 199. 3. சிறுபாண் ஆற்றுப்படை : இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர் பாடிய இந்நூல், 269 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆகியது. பரிசில்பெற்ற சிறு பாணன் ஒருவன் பெருத சிறு பாணன் ஒருவனை ஒய்மாட்டு நல்லியக் கோடனிடம் ஆற்றுப்படுத்தி அனுப்பியதாக உள்ளது இந்நூல். 4. பெரும்பா ளுற்றுப்படை : 500 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவாலான இதனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனர் பாடினர். பரிசு பெற்ற பெரும்பாணன் ஒருவன், பெருதான் ஒருவனைக் காஞ்சித் தொண்டைமான் இளந்திரையனிடத்து ஆற்றுப்படுத்துவது இந் நூல். 5. முல்லைப்பாட்டு : 103 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் அமைந்தது. இதன் ஆசிரியர், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகளுர் மகளுர் நப்பூதனர் ஆவார். இப் பாடல் அகப் பொருள் பற்றியது. தலைவன் பிரிந்திருக்கத் தலைவி ஆற்றி யிருந்த அருமையினேயும், போர் முடித்துத் தலைவன் மீண்ட பெருமையினையும் பற்றிப் பேசுவது இந்நூல். (முல்லை = ஆற்றி யிருத்தல்.) 5. மதுரைக் காஞ்சி : - வஞ்சியடிகள் கலந்த - 782 அடிகள் கொண்ட ஆசிரியப் பாவால் அமைந்த இந்நூலின் ஆசிரியர் மாங்குடி மருதனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழி யனுக்கு, உலக நிலையாமையை உணர்த்தி, வீடுபேறு எய்துதற்கு உரிய நல்வழிகளைச் செவியறிவுறுத்துவதாக அமைந்துள்ளது இந்நூல். பாண்டியன் நெடுஞ்செழியனது பெருமையும், மதுரையின் மாண்புறு வளமும் இந்நூலில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. (காஞ்சி = நிலையாமை.)