பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தமிழ் நூல் தொகுப்புக் கை களித்த மும்மதக் களிற்றி யானைகிரை மணியொடு மிடைந்த அணிகிளர் பவளம் மேவிய நித்திலக் கோவை என்ருங்கு அத்தகு பண்பின் முத்திற மாக முன்னினர் தொகுத்த கன்னெடுங் தொகைக்கு..." என்னும் பகுதியை ஊன்றி நோக்கின், நாம் மேலே தந்துள்ள தொகுப்பு வரலாற்று முறை பொருத்தமானது என்பது: புலகுைம். - . இனி, எட்டுத் தொகை நூல்களுள் ஒவ்வொன்றினையும். தனித்தனியாக விதந்து ஆராய்வோம். - 7. நெடுந்தொகை இந்நூல், இறையனர் அகப்பொருள் உரையில், நெடுந்: தொகை நானுாறு’ என்னும் பெயரால், எட்டுத்தொகை நூல்களுள் மு. த லா வ த ா க நிறுத்தப்பெற்றுள்ளது. பேராசிரியர், நச்சினர்க்கினியர் போன்ருேரும் இதனையே முதல் தொகைநூலாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த நூல், நெடுந்தொகை என்னும் பெயருடன், அகம், அகப்பாட்டு, அகநானுாறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு: வருகிறது. நெடுக்தொகை இந்த நூலுக்கு நெடுந்தொகை என்னும் பெயர் உண்மையை, இறையனர் அகப்பொருள் உரையாலும், "நெடுந்தொகை முதலாகிய தொகையெட்டும் என்றவாறு - என்னும் போாசிரியர் (செய்யுளியல் - 236) உரைப்பகுதி யாலும், "அவை நெடுந்தொகை முதலிய தொகை எட்டுமாம்' - என்னும் நச்சினர்க்கினியரின் (செய்யுளியல் - 236) உரைப்பகுதியாலும் அறியலாம் என்னும் செய்தி முன்னரே ஒரிடத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சி இன்னும் சில இடங்களில் உள்ளது என்பதற்கு ஒர் எடுத்துக் காட்டாக நச்சினர்க்கினியரின் உரைப்பகுதி யொன்றினைக் காண்பாம் : தொல்காப்பியம் - அகத்தினையியலில் "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் என்று தொடங்கும் (53 ஆம்) நூற்பாவின் கீழ், நச்சினர்க்கினியர் எழுதியுள்ள, "ஆசிரியமும் வெண்பாவும் வஞ்சியும் அகம் புறம் என்னும் இரண்டிற்கும் பொதுவாய் வருமாறு நெடுங். தொகையும் புறமும் கீழ்க்கணக்கும் மதுரைக் காஞ்சியும் பட்டினப்பாலேயும் என்பனவற்றுட் காண்க - இந்த உரைப்பகுதியில், புறநானுாற்றைப் புறம்’ எனவும் அகநானூற்றை "நெடுந்தொகை" எனவும் நச்சிஞர்க்கினியர்