பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் நூல் தொகுப்புக் கை பாடல் முழுவதையும் தந்து, அதன் கீழே, 'இக் களிற்றியான கிரையுள் இருவகை வேனிலும் பாலைக்கண் வந்தன." - என்று அவர் வரைந்துள்ளார். இந்த அமைப்பை நோக்குங்கால் களிற்றியான நிரையை ஒரு தனித் தொகை நூலாகவே கூறலாம் போலும்! மணிமிடை பவளம் மணிமிடை பவளம் என்னும் பிரிவைப் பற்றி, அகநானூற்றுப் பாயிரப் பாடலின் பின்னல், "நா நகை யுடைய நெஞ்சே என்பது முதலாக, "நாள் வலை முகர்ந்த” என்பது சருகக் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் மணிமிடை பவளம் எனப்படும். இதுவுங் காரணப் பெயர்: என்னை, செய்யுளும் பொருளும் ஒவ்வாமையால். - எனக் கூறப் பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பெயர்க் காரணம் தெளிவாக இல்லை என்று கூறுவதனினும் பொருத்தமாக இல்லை என்றே கூறிவிடலாம். மணி என்பது நீலமணி, இது நீலநிறமாய் இருக்கும். பவளம் சிவப்பாய் இருக்கும். நீலமும் சிவப்பும் எதிர் மாருணவை என்பதால், மணி மிடை பவளம் என்னும் பெயர் கொண்ட இந்த நூலில் செய்யுளும் பொருளும் ஒவ்வாமல் இருப்பதாகக் கருதி, அந்தக் காரணத்தினலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டது எனப் பாயிரப் பகுதியை எழுதியவர் கூறியுள்ளார். மணிமிடை பவளம் என்ருல், - நீலமணி கலந்த பவளம் - நீல மணியோடு கலந்த பவளம் - அஃதாவது நீல மணியும் பவளமும் மாறிமாறிக் கலந்து கோத்த மாலே, என்று பொருளாம். இந்த விளக்கத்தின் உதவிக்கு வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை; அகநானுாற்றிலேயே இரண்டு இடங்களில் இந்த விளக்கம் இடம் பெற்றுள்ளது. அவை யாவன : ' அரக்கத் தன்ன செங்கிலப் பெருவழிக் காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மண்ணிமிடைக் தன்ன குன்றம் கவைஇய' ந்ெடுந்தொகை 247 என்னும் அகநானூற்றுப் (14-ஆம்) பாடல் ولة كهين به நீல நிறமான காயாம் பூக்கள் சிவந்த தம்பலப் பூச்சிகளுடன். வழியில் கலந்து கிடக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. இதே காட்சி விளக்கம்,

  • மணிமிடை பவளம் போல அணிமிகக்

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப' என்னும் அகநானூற்றுப் (304-ஆம்) பாடல் பகுதியிலும் இடம் பெற்றுள்ளது. முதல் பாட்டிலாயினும் பவளமொடு மணி மிடைந்தன்ன என்ற தொடர் உள்ளது: இரண்டாம் பாட்டிலோ மணி மிடை பவளம்" என்னும் தொடர் அப்படியே உள்ளது. இந்தத் தொடரின் அறிமுகத்தைக் கொண்டே மணிமிடை பவளம் என்னும் பெயரைக் கற்றுக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், இங்கேயுள்ள வியப்பிற்கு உரிய செய்தி என்னவெனில், மணிமிடை பவளம் பற்றிப் பேசும் அகநானூற்றுப் பாடல்கள் இரண்டுமே, 'மணிமிடை பவளம்' என்னும் தொகுப்பினுள் இல்லாததுதான்! மேலே காட்டியுள்ள இரண்டனுள் முதல் பாட்டு களிற்றியானே நிரையிலும், இரண்டாவது பாட்டு நித்திலக் கோவையிலும் உள்ளன. இதற்கு என்ன செய்வது! ஆக, அகநானூற்றின் ந டு வே யு ள் ள குறிப்பிட்ட நூற்றெண்பது பாடல்களின் தொகுப்புக்கு, * uba:ಜ# மிடை பவளம்" எனப் பெயர் வைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம இருக்கவேண்டும்: இல்லாவிடினும், நாம் ஏதாவதொரு காரணம் - தக்கதாய்ச் சொல்லியாக வேண்டும். நீலமணியும் செம்பவளமும் ஆகிய இருவேறு வகைப்பட்ட மணிகளால் ஆன மாலை போல, நடையாலும் கருத்து Qమొు பாட்டாலும், இரு வேறு வகைப்பட்ட பாக்களின் தொகுப்புக்கு 'மணிமிடை பவளம் என்னும் பெயர் உவம்ை யாகு பெயரால் வழங்கப்பட்டது என்பதாக ஒரு காரணம் சொல்லலாம். இந்தக் கண்கொண்டு மணிமிடை பவளச் செய்யுட்களே நுணுகி நோக்கி ஆராய்வார்க்கு உண்மை.