பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 தமிழ் நூல் தொகுப்புக் கை தொல்காப்பியம் - களவியலில் நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும் என்று தொடங்கும் (23 -ஆம்) நூற். பாவின் கீழ், 'கான மானதர் யானையும் வழங்கும்’ என்று தொடங்கும் அகநானூற்றுப் (318 -ஆம்) பாடல் முழு வதையும் தந்து, அதன் கீழே, 'என்னும் கித்திலக் கோவை, யுள், வரினே, ஏமுறு துயரம் நாமிவ ணுெழிய, நின் ய்ை பயிர் குறிநிலை கொண்ட கோட்டை, ஊதல் வேண்டு மாற் சிறிது’ என்றவாறு, நித்திலக் கோவை என்னும் பெயரை 2தந்து கூறியுள்ளார். எனவே, நித்திலக் கோவையையும் ஒரு தனித் தொகை நூலாகக் கூறலாம். - நானுாறு பாடல்கள் வீதம் கொண்ட குறுந்தொகை யிலும், நற்றிணையிலும் எந்தப் பிரிவும் இல்லாதிருக்கவும். அகநானுாற்றில் மட்டும் மூன்று பிரிவுகள் இருப்பது, ஒருவகைச் சிறந்த தொகுப்புக் கலையாகும். தொகை நூல் களுக்குள் இது முதலிலே தொகுக்கப்பட்ட தாதலின், இவ்வாறு பிரிக்க நேர்ந்தது எனலாம். நானுாறு பாடல் களையும் ஒருசேரப் படிப்பது மலைப்பாயிருக்கு மாதலானும், பகுதி பகுதியாகப் பிரித்துவிட்டால் படிப்பதற்கும் கையாள வதற்கும் (கையில் வைத்துப் பயன்படுத்துவதற்கும்) எளிதா யிருக்கு மாதலானும், இந்தப் பிரிவில் உள்ள பாடல் எனப் பாடல்களைச் சுட்டியறிவுறுத்துவதற்கு வசதியாய் இருக்கு மாதலானும், இன்னபிற காரணங்களாலும் அகநானுாறு: மூன்ருகப் பிரிக்கப் பெற்றிருக்கலாம். மூன்ருகப் பிரித்தது. பெரிதில்லை: மூன்று பிரிவுக்கும் களிற்றியான நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என்னும் எடுப்பான - கவர்ச்சியான இனிய பெயர்களை வழங்கியிருப்பது ஒரு பெரிய கலைக்கூருகும். தொகுத்த முறை அகநானூறு தொ குத் த முறையில் வியத்தற்கும் நயத்தற்கும் உரிய வேருெரு கலைத்திறன் உள்ளது. அகத்திணை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாக்ல நெடுந்தொகை - 25N என ஐந்து வகைப்படும் என்பதும், இந்த ஐந்தும் "அகன் ஐந்திணை எனப்படும் என்பதும் அறிந்த செய்திகளே. இந்த ஐந்து திணைகளையும் பற்றிய நானுாறு பாடல்களைக்கொண்டது அகநானுாறு. இந்நூலில் உள்ள நானுாறு பாடல் களும் ஐந்து திணைகளுக்கும் பங்கிடப் பட்டிருக்கும் முறைஅதாவது - ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களை எண் ளிைட்டு வரிசைப் படுத்தியமைத்திருக்கும் முறை ஓர் அருங்கலைச் செயலாகும். அந்தக் கலையழகு வருமாறு : நானுாறு பாடல்களில் நாற்பது பத்துப் பாடல்கள் (10 x 40 = 400) உள்ளன. ஒவ்வொரு பத்துப் பாடல்களி லும் ஒற்றைப் படையாக உள்ள ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்னும் ஐந்துவித எண்கள் கொண்ட பாடல்கள் பாலைத்தினைக்கு உரியனவாம்; இரட்டைப் படையாக உள்ள மற்ற எண்களுள் இரண்டு, எட்டு என்னும் இரண்டுவித எண்கள் கொண்ட பாடல்கள் குறிஞ்சித் திணைக்கு உரியன வாம்; நான்கு என்னும் எண் கொண்ட பாடல் முல்லைத் திணைக்கு உரியதாம்; ஆது என்னு:ம் என் கொண்டது மருதத் திணைக்கு உரியது; பத்து என்னும் எண்ணுடையது நெய்தல். திணையாம். எனவே, ஒவ்வொரு பத்துப் பாடல்களிலும், பாலைக்கு ஐந்து விதமும், குறிஞ்சிக்கு இரண்டு வீதமும், முல்லைக்கும் மருதத்திற்கும் நெய்தலுககும் ஒவ்வொன்று விதமும் இருக்கும என அறியலாம. ஆகவே, நானுாறு பாடல்களிலும், பாலேக்கு நாறபது ஐந்து வதம் (5 x 40 =200). இருநூறு பாடல்களும், குறிஞ்சிக்கு நாற்பது இரண்டு வீதம் (2 x 40= 80) எண்பது பாடல்களும், முல்லைக்கு நாற்பது ஒன்று வீதம் (1 x 40 = 40) நாற்பது பாடல்களும், மருதத் திற்கு நாற்பது ஒன்று வீதம் ( x 40 = 40) நாற்பது பாடல் களும், நெய்தலுக்கு நாற்பது ஒன்று வீதம் (1 x 40 = 40). நாற்பது பாடல்களும் இருக்கும். - எடுத்துக்காட்டாகப் பார்ப்போமாயின், 11, 53, 105, 207, 319 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் பாலேத் திசை கயாகவும், 22, 378 ஆகிய எண்கள் கொண்ட பாடல்கள் குறிஞ்சித் தினேயாகவும், 154 ஆம் எண் கொண்ட பாடல்