பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ் நூல் தொகுப்புக் கை இதனை இன்னும் நன்கு தெளிய விரும்பின், தொல்காப்பிய ருடன் பயின்ற நண்பராகிய பனம்பாரர்ை என்பவர் தொல் காப்பியத்திற்குத் தந்துள்ள சிறப்புப் பாயிரச் (மதிப்புரைச்} செய்யுளில் உள்ள, ... தமிழ் கூறும் நல்லுல கத்து வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும நாடிச் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலங் தொகுத் தோனே..................... தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் கிறுத்த படிமை யோனே. என்னும் பகுதியை ஊன்றி நோக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள "வழக்கும் செய்யுளும்...... நாடி’, ‘முத்து நூல் கண்டு முறைப்பட எண்ணி’ என்னும் தொடர்கள், 'தமக்கு முன் இருத்த செய்யுள்களையும் நூல்களையும் ஆராய்ந்தே தொல்காப்பியர் நூல் இயற்றினர் என்பதைப் பறை சாற்றுகின்றன அன்ருே? இன்னும், இந்தப் பாடற் பகுதியில் உள்ள புலம் தொகுத்தோனே' என்னும் தொட ரையும் நன்கு நோக்கவேண்டும்'. 'தமக்கு முன்பு உள்ள நூல் களில் விரிந்து பரந்துகிடக்கும் செய்திகளைத் தொல்காப்பியர் சுருக்கித் தொகுத்து எழுதியுள்ளார்' என்பது, இந்தத் தொடரின் கருத்து. ஆம்! செய்யுள் இலக்கணம் இன்னும் விரிவாகக் கூறப்பட்டிருப்பதாகப் பேராசிரியர் அறிவித்துள் ளார். இதனை, தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள வழி யெனப் படுவது அதன் வழித்தாகும்’ என்னும் (95ஆம்) நூற்பாவின் கீழ்ப் பேராசிரியர் எழுதியுள்ள, "...தொல் காப்பியம் கிடப்பப் பல்காப்பியனுர் முதலியோர் நூல் செய்தது எற்றுக்கெனின், அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளு மெல்லாஞ் செய்திலர். செப்புள் இலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்ததனே இவ் வாசிரியர் சுருங்கச் செய்தலின் அருமை. நோக்கிப் பகுத்துக் கூறிஞராகலானும்’ عيخة عن 3 يع நூல் தொகுப்புக் கலை 7 என்னும் பகுதியால் அறியலாம். எனவே, தமிழ் மொழியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே செய்யுள் இலக்கண நூல்கள் பல தோன்றியிருந்தமை புலகுைம். எள் ளா? எண்ணையா? செய்யுள் இலக்கணம் தோன்றிய பின்னர்ச் செய்யுள்கள் இயற்றப்பட்டனவா? செய்யுள்கள் இயற்றப்பட்ட பின்பு செய்யுள் இலக்கணம் எழுந்ததா? எள் முந்தியதா? எண்ணெய் முந்தியதா? எள் இன்றி எண்ணெய் எப்படி எடுக்க முடியும்? எள்ளே முந்தியது. "எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்” என்பது பேரகத்திய நூற்பா என்று சொல்லப்படுகிறது. செய்யுளாகிய இலக்கியம் இல்லாமல் எதைப்பற்றி இலக் கணம் எழுதுவது? இலக்கியம் கண்டதற்கே இலக் கணம் இயம்பினர்கள். எனவே, இலக்கியமே முந்தி யது. பலரும் பல்வேறு வகைப் பாடல்கள் அந்தப் பாடல்களைப் படித்தறிந்த அறிஞர்கள், இனி இன்னின்ன பாடலை இன்னின்னவாறு தான் இ ய ற் ற வேண்டும்; இன் னின்னவாறு இயற்றும் பாடல்கள் இன்னின் ைபெயர் பெறும் என்று கரைகோலினர்கள். கரை போட்டால்தானே ஆற்று நீர் கண்டபடி ஒடிச் சிதைக் காமல் - சிதையாமல் நேரிதின்ஒடிச், சிதருமல் பயன்தரும்! செய்யுள் இயற்றும் முறைக்குப் போட்ட அந்தக் கரைக்குத் தான், செய்யுள் இலக்கணம் என்னும் பெயர் சூட்டப் 参 o S 0S SS SS SSASAS SSAS SSAe AAAAA பாடி ஒே á తIT . பட்டது. எனவே, பாடற்கலை, தொடக்கத்தில் எந்த இலக்கணக் கட்டுப்பாடும் இன்றி, இயற்கையாகப் பொதுமக்களிட மிருந்து தோன்றியது என்னும் பேருண்மை புலப்படும். அஃதாவது படிக்காத பலதுறைப் பொது மக்களிடையே புழங்கிய நாட்டுப் பாடல் போன்றதொரு வகைப்பாடல் களே அந்தக் காலத்தில் முதல் பாடல்களாக இருந்தன. பின்னர், இவற்றை அடிப்படியாகக் கொண்டு படிப்படியாக