பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - தமிழ் நூல் தொகுப்புக் கலை என்பது ஊடுதல் (போலிப் பிணக்கு). புணர்தலிலும் தலைவ னும் தலைவியும் ஒன்ரு யுள்ளனர்; ஊடலின் போதும் தலைவ னும் தலைவியும் ஒன்ரு யுள்ளனர்; ஊடுதலின் முடிவு (Resuit) கூடுதலே (புணர்தலே) யாகும்; எனவே ஊடுதலாகிய மருதத்தைப் புணர்தலாகிய குறிஞ்சியுள் அடக்கலாம். அடுத்து,- பாலை என்பது பிரிதல்; முல்லை என்பது பிரிந்த போது ஆற்றியிருத்தல்; நெய்தல் என்பது பிரிந்தபோது ஆற்ருது இறங்குதல்- அதாவது - வருந்துதல்; எனவே பா.ை முல்லை, நெய்தல் என்னும் மூன்றுமே பிரிவுத் தொடர் பானவை என்பது பெறப்படும். பிரிதலாகிய பாலே இல்லை யேல், பிரிந்து ஆற்றியிருத்தலாகிய முல்லைக்கும். பிரிந்து ஆற்ற முடியாமல் இரங்குதலாகிய நெய்தலுக்கும் வேலையே @త్తడి. எனவே, பிரிவின் கூறுகளாகிய முல்லையையும் நெய் தலையும் பாலேக்குள் அடக்கலாம். ஆகவே, ஐந்து என விரித்துச் சொல்லும் திணைகளை, குறிஞ்சி பாலை என்று இரண்டாகத் தொகுத்துச் சொல்லிவிடலாம். இந்தக் கருத்து தொல்காப்பியத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிரா விடினும், செய்யுளியலில் உள்ள, - * 'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் ஒழுக்கமும் என்றிவை யிழுக்குநெறி யின்றி இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னது பொதுவாய் கிற்றல் பொருள்வகை என்ப.” என்னும் (208-ஆம்) நூற்பாவிலிருந்து குறிப்பாய் எடுத்துக் கொள்ள இடமிருப்பதாகத் தெரியவில்லையா? எனவே தான், அகநானூற்றில் மற்ற மூன்றினும் குறிஞ்சியும் பாலையுமே மிகுந்த இடத்தைப் பெற்றுள்ளன. இனிக் குறிஞ்சியையும் பாலையையும் பற்றி ஆய்வாம்: குறிஞ்சி புணர்தல்: பால பிரிதல். இவையிரண்டும் ஒன்றுக் கொன்று எதிர் மாருனவை. குறிஞ்சி என்னும் கட்சித் தலை வனுக்கு ஆதரவாக மருதத்தான் ஒருவன் மட்டுமே வாக்கு .(Vote) அளித்துள்ளான். பாலே என்னும் கட்சித் தலைவ லுக்கோ முல்லையான், நெய்தலான் ஆகிய இருவரின் வாக்கு நெடுந்தொகை 255 .கள் (Votes) கிடைத்துள்ளன. எனவே, குறிஞ்சிக் கட்சியினும் பாலைக் கட்சியே பெரிய கட்சியாகக் காட்சியளிக்கிறது. இந்த அடிப்படையில் நோக்கின், அகநானூற்றிலுள்ள நானுாறு வாக்குகளுள் (பாடல்களுள்) குறிஞ்சிக் கட்சிக்கு (குறிஞ்சி 80 + மருதம் 40 = 120) நூற்றிருபது வாக்குகளும், பாலைக் கட்சிக்கு (பாலை 200 + முல்லை 40 + நெய்தல் 40 = 280) இருநூற்றெண்பது வாக்குசளும் கிடைத்துள்ளமை புலனாகும். பாலே மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்பட்ட பெரும்பான்மை (Majority) வாக்குகள் பெற்று. பிகப் பெரிய கட்சியாக அகநானுாற்றில் ஆட்சி செலுத்திக் கொண்டிருக் கிறது. வேடிக்கைக்காக மேலே சொல்வியுள்ளபடி, மக்களாட்சி (சனநாயக) முறையில் பாலை பெற்றிருக்கும் பெரும்பான்மை அறிவிப்பதாவது, பாலைத்திணைக்கு உரியதான பிரிவு என்னும் துன்பச் சுவைப் பாடல்களையே பெரிதும் மக்கள் விரும்பி யுள்ளனர்" என்பதாகும். இருப்பினும், .ெ ப ா து வி ல், குறிஞ்சிக்கு உரியதான புணர்தலாகிய இன்பச் சுவையினையே மக்கள் பெரிதும் விரும்பிப் படிப்பர் எனக்கூறிச் சிலர் கருத்து வேறுபாடும் கொள்ளலாம். நாடகக் கதையினை இன்பியல் (Comedy), துன்பியல் (Tragedy) என இரண்டாகப் பிரித்துக் கூறுவர். இன்பமாக முடிவது இன் பியல்: துன்பமாக முடிவது துன்பியல். ஈண்டு நாம் குறிஞ்சியை இன்பியல் போன்றது என்றும், பாலையைத் துன்பியல் போன்றதென்றும் கூறலாம். இதன. "இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்" என்னும் தொல்காப்பிய நூற்பா (செய்யுளியல் - 208) குறிப்பாய் உணர்த்துவதுபோல் இல்லையா? இந்த இன்பியல், துன்பியல் இரண்டனுள், இளைஞர்களுள் பெரும்பாலோர் இன்பியலை -யும், முதியவர்களுள் பெரும்பாலோர் து ன் பி ய ல யு ம் மிகுதியாக விரும்பிப் படிப்பர் எனலாம். யான், 'மலர் மனம்’ என்னும் நெடுக்கதை (நாவல்) ஒன்று எழுதி வெளியிட்டுள்ளேன். அது துன்பியலாகும்.