பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 . தமிழ் நூல் தொகுப்புக் கை "உம்மை எதிர்மறை யாகலின், இம் முறையன்றிச் சொல்லவும்படும் என்பது பொருளாயிற்று. அது தொகை களினும் கீழ்க்கணக்குகளினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க. -- என்னும் உரைப்பகுதியாலும், அதே நூற்பாவின்கீழ் இளம்பூரணர் எழுதியுள்ள, " உ ம் மை எதிர்மறையாகலான் இம்முறையன்றிப் பிறவாய்பாட்டாற் சொல்லவும் படும் என்றவாறு. காடு நாடு மலை கடல் என்பதே பெருவழக்கு. இன்னும் சொல்லிய முறையாற் சொல்லவும் படும் என்றதனன், இம் முறை யன்றிச் சொல்லவும் படும் என்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறுதல். அது சான்ருேர் செய்யுட் கோவையினும் பிற நூலகத்துங் கண்டு கொள்க." என்னும் உரைப் பகுதியாலும் உணரலாம். தொகை நூல்களுள் தொல்காப்பிய முறை மாறிவந்திருப்பதாக உரையாசிரியர்கள் உணர்த்தியுள்ளனர். எனவே, நெடுந் தொகையுள் பாலைக்கு முதலிடம் தந்திருப்பதில் பிழை யொன்றும் இல்லை. ஈ ண்டு மேலும் ஒன்று நோக்கத் தக்கது. ஐங்குறு நூற்றிலும் கலித்தொகையிலும் ஐந்திணைப் பாடல்கள் கலந்து தொகுக்கப்படாமல், திணைவாரியாகத் தொகுக்கப்பட் டிருப்பதுபோல, அகநானூற்றிலும் தொகுக்கப்பட்டிருக் கலாமே - என்ற வின எழலாம். அவ்விரு நூல்களிலும் ஒவ்வொரு திணைக்கு உரிய பாடல்களும் ஒவ்வொரு புலவரால் பாடப்பட்டவை யா த லா னு ம், ஏறக்குறைய ஒத்த எண்ணிக்கையுடையவை யாதலானும், அந்த நூல்களில் திணைவாரியாகத் தொகுக்கப்பட்டன. அகநானுாற்றிலோ, ஒவ்வொரு திணைக்கும் உரிய பாடல்கள் பலரால் பாடப் பட்டவை யாதலானும், ஒத்த எண்ணிக்கையில் இன்றி, 200,80 40,40, 4. என்னும் வேறுபட்ட எண்ணிக்கையில் இருத்தலானும் திணைவாரியாகத் தொகுக்க முடியவில்லை. நெடுந்தொகை 259 அகநானூற்றுத் தொகுப்பு முறை மிகவும் அழகியது. நானுாறில் பாதிப் பாடல்கள் பாலையாயிருப்பதால், ஒன்று விட்டு ஒன்ருக ஒற்றையெண்களில் பாலையை யமைத்தும், பாலைப் பாக்களின் இடையிடையே ஒன்றுவிட்டு ஒன்ருக மற்றப் பாக்களை அமைத்தும் தொகுத்துள்ள முறையின் அழகே அழகு! தமிழர்கள் பாடல் தொகுப்புக் கலையில் காட்டி யுள்ள உயர்திறனுக்குச் சான்றுபகர இஃது ஒன்றே போதுமே: இந்தத் தொகுப்புமுறையில் சில வசதிகள் உள்ளன. ஒரே திணையைப்பற்றிய பாடல்களைத் தொடர்ந்து படிப் பதால் ஏற்படக்கூடிய சலிப்புக்கு இதில் இடமில்லை. பாடலுக்குப் பாடல் மாற்றம் இருப்பதால் கவர்ச்சியூட்டி ஆர்வமுடன் படிக்கத் தாண்டும். ஆராய்ச்சியாளர்கள் எண்ணைக் கொண்டு திணையையும், தினேயைக் கொண்டு எண்ணையும் தீர்மானித்துச் செயலாற்ற இது வசதியானது. பாடல்களின் தலைப்பாகத் திணைப்பெயர்களும் தொடர்ந்து துறைகளும் தரப்பட்டுள்ளன. இவ்வாறு இதில் பல நன்மைகள் உண்டு. அகங்ானுற்று ஆசிரியர்கள் : அகநானூறு, குறைந்த அளவு பதின்மூன்று அடிகளும். மிகுந்த அளவு முப்பத்தோரடிகளும் கொண்ட நானுirறு பாக்களால் தொகுக்கப்பட்டது என்பதும், இதனைத் தொகுப் பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பதும், தொகுத்தவர் உருத்திரசன்மர் என்பதும், இன்ன பிறவும் நாம் முன்னரே அறிந்த செய்திகளாம். ஆனல், அகநானுரற்றுப் பாடல்களை இயற்றிய ஆசிரியர்களைப்பற்றி நாம் இதுவரை மூச்சுப் பேச்சுக் காட்டவில்லையே! அவர்கள் இன்றி அகநானுாறு ஏது? - அகநானூற்றின் இறுதியில் உள்ள பாயிரப் பாடை அடுத்திருக்கிற உரைநடைப் பகுதியில், "நெடுந்தொகை நானுாறு கருத்திைேடு முடிந்தன: இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர்' - என்னும் செய்தி தெரிவிக்கப் பட்டுள்ளது. நெடுந்தொகைப் பாடல்கள் நானுாறு என்றும்,