பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

枣2 தமிழ் நூல் தொகுப்புக் கலை போல, ஒருமுறை பெற்ற பாடலைத் திரும்பத் திரும்ப விலைகொடுத்து வாங்க வேண்டுமா என்ன? மேலும், பாடலின்பம் எத்தனை முறை சுவைத்தாலும் தெவிட்டாது - எவ்வளவு நேரம் நுகர்ந்தாலும் சலிப்புத் தட்டாது: நுகர நுகரச் சுவை பெருகும் ஈடுபட ஈடுபட இன்பம் கொழிக்கும். ஈண்டு, நவில் தொறும் நூல் நயம் போலும் என்னும் திருக்குறள் (783) பகுதியும், தேருந் தொறும் இனிதாந் தமிழ்" என்னும் தஞ்சைவாணன் கோவைப் (59) பாடற் பகுதியும், மங்கையொருத்தி தருஞ் சுகமும் எங்கள் மாதமிழுக்கு ஈடில்லை" என்னும் பாரதிதாசன் பாடற் பகுதியும் ஒப்பு நோக்கி மகிழத்தக்கன. இந்தப் பகுதிகளில் 'தமிழ்’ என்றிருப்பினும், மற்ற மொழியாளர்கள் தத்தம் தாய்மொழிப் பாடல்களை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ளலாம். பொய் பிறந்தது புலவர் வாயிலே : ' கெய் பிறந்தது பசுவின் பாலிலே கொய் பிறந்தது அரிசி துணியிலே கை பிறந்தது தோளின் கடையிலே பொய் பிறந்தது புலவர் வாயிலே " என்னும் பாட்டைப் பாட்டனர் பன்முறை சொல்லக் கேட்ட துண்டு. "பொய் பிறந்தது புலவர் வாயிப்ே’ என்னும் தொடர், புலவர்கள் பொய் பர்கள் - பொய் சொல்பவர்கள் என்னும் கருத்தையா அறிவிக்கிறது? இல்லை. மேலுக்கு அவ்வாறு தோன்றினும், இங்கே * பொய்" என்பது கற்பனையைக் குறிக்கிறது. கற்பனை நயம் அமைந்திருப்பது பாடலுக்குச் சிறப்பிலக்கணம் அல்லவா? நாளடைவில் புலவர் சிலரின் பாடல்களில் கற்பனை வரம்பு கடந்து எல்லை மீறிப் போய்விட்டதால், அந்தக் கற்பனைச் செய்தியை நம்ப முடியாமல் பொய்' என்று எண்ண வேண்டியதாயிற்று. இத்தகைய 'அண்டப் புளுகு - ஆகாயப் புளு கு' கற்பனைகள் பண்டைக் காலத்தில் இருந்ததில்லை: இவை பிற்காலத்துச் சரக்குகளே! இவற்றைக் கொண்டு, புலவர்களைப் பொய்யர் -கள் என்று எண்ணி விடலாகாது. நூல் தொகுப்புக் கலை 13: கற்பனை பாடலுக்கு உயிர் நாடி. கவிஞன் எனப்படும் பாவலன், இயற்கை யமைப்பையும் வாழ்க்கை நடைமுறை யினையும் உற்று நோக்கித் தன் கற்பனை வாயிலாக அவற்றுக்கு மறு உருவம் தந்து அவற்றை மறுபடைப்புச் செய்து காட்டு கிருன். அதனுல் பாவலனை, படைப்பவன்' (Maker) எனச் சொல்வது மரபு. பாடலே முற்றும் அறிவியல் (விஞ்ஞானக்) கண்கொண்டு பார்க்கல காது. பாவலனுக்கும் பகுத்தறிவு உண்டு; ஆனல் அவன் கற்பனை நயத்தை நம்பிக் காலங்கழிப்பவன். ஆனல் இங்கே கற்பனை என்பது, உள்ளதை இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும் கூறும் பொய்யன்று. பாவலனும் உள்ளதைத் திரிக்காமல் உள்ளபடியேதான் கூறுகின்ருன் : ஆனல் அதனை ஒரளவு அணிசெய்து (அலங்காரப் படுத்திக்) கூறுகிருன்; அதனைத்தான் கற்பனை என்கிருேம்: திருமணக் கோலத்துடன் ஊர்வலம் செல்லும் மனப் பெண்ணுக்குச் செய்யப் பெற்றுள்ள ஒப்பணை' போன் து கற்பனை. அந்தப் பெண் பழையவள் பழையவள் தான்! ஆனால், இப்போது புதிய உருவம் பெற்றுப் புதியவளாய்த் திகழ்கின்ருள். இவ்வாறே, உள்ளபடி உள்ள நிகழ்ச்சிக்குக் கற்பனையின் வாயிலாகப் புது உருவம் கொடுக்கிருன் பாவலன். இந்தக் கலையில் கைதேர்ந்த பாவலர்கள் புதிய சமுதாயத்தையே - பு தி ய உலகத்தையே படைக்கவும் முடியும். கற்பனே கலந்த கருத்துக்களின் வாயிலாகப் புதிய உலகைப் படைப்பதுதானே பாடற்கலையின் உயர் எல்லை: பாவலன் ஒரு தனி மாந்தனே! ஆல்ை அவன் மன்பதையுள் (சமுதாயத்துள்) ஒருவனதலின், அவனது உள்ளத்தெழும் கற்பனை, அவன் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகும் மன்பதை (சமுதாயத்தின்) சூழ்நிலையை அடித் தளமாகக் கொண்டதாகவே இருக்க முடியும். எனவே தான், அவன், தன்னேச் சூழ்ந்துள்ள மன்பதையைத் தனது கற்பனே யால் கவர்ந்து, தன்னுடன் அழைத்துச் சென்று, அவரவர் வேற்றுமைகளை மறந்து உயரிய உள்ளப் பண்புடன் ஒன்று