பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 "பதிகம்" என்னும் ஒவ்வொரு பத்துக்கும் முன்னல் உள்ள பத்துப் பாடல்கள் பெயரைப் பார்த்து, பிற்காலத்தவர், கொண்ட சிறுசிறு மடல்களுக்குப் (சிறு நூல்களுக்குப்) *பதிகம்’ என்னும் பெயர்வைக்கத் தொடங்கி விட்டனர். அந்தப் பதிகம்-இந்தப் பதிகம் என இந்தக் காலத்தில் ஆயிரக் கணக்கான பதிகங்களைக் காணலாம். ஒவ்வொரு பதிகத்திலும் பத்துப் பாடல்கள் இருக்கும். பதிகம்’ என்னும் சொல்லுக்குப் பத்துக் கொண்டது எனப் பொருள் செய்து ஏராளமான பதிகங்களை இயற்றித் தள்ளியுள்ளனர். மற்றும், பதிகம் என்னும் சொல் பதியம்’ என மாறிப் "பாட்டு" என்னும் பொருளில், 'அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம்-இன்னிசையில் பாடிக் கொடுத்தாள்கற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தானைச் சொல்' • என ஆண்டாளின் திருப்பாவைத் தனியனில் ஆளப்பட்டிருப் பதும் ஈண்டு எண்ணத்தக்கது. இந்தத் தனியன் ஒன்பதாம் நூற்ருண்டில் உய்யக்கொண்டார் என்பவரால் இயற்றப் பெற்ற தாகும். பதின்மூன்ரும் நூற்ருண்டில் நன்னுால் இயற்றிய பவணந்தி முனிவர், நன்னுரல் - பொதுப் பாயிரம் முதல் நூற்பாவில், பாயிரம் என்பதற்கு உரிய வேறுபெயர்களுள் "பதிகம்" என்பதும் ஒன்று எனத் தெரிவித்துள்ளார்:"முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் புறவுரை தந்துரை புளைந்துறை பாயிரம்’ என்பது அந் நூற்பா இதன் விருத்தியுரைக9ல் பதிகம்’ என்னும் சொல்லே விளக்கவந்த சங்கர நமச்சிவாயர், 'பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுதல் தானேஎன்பவாகலின்... பல்வகைப் பொருளையும் தொகுத்துச் சொல்லுதலின் பதிகமென்றும்... பெயராம் என்றவாறு’’. தமிழ் நூல் தொகுப்புக் கலை உயதிற்றுப் பத்து 3.23 என்று கூறியுள்ளார். பின்னல் வி ரி வா. க ச் சொல்லப் போகும் செய்திகளை முன்கூட்டித் தொகுத்துச் சொல்வது பாயிரமாகும். பதிற்றுப் பத்தில் ஒவ்வொரு பத்துக்கும் முன்னல் உள்ள பதிகம், அந்தப் பத்தைப் பற்றிய செய்தி களைச் சுருக்கிச் சொல்வதால், ஒவ்வொரு பதிகத்தையும் ஒவ்வொரு பத்தினுடைய பாயிரம் என்று சொல்லலாம் போல் தோன்றுகிற தல்லவா? எனவே, இந்தப் பதிகம்’ என்னும் பெயரைப் பார்த்தே தன்னுரலார் பாயிரத்திற்குப் *பதிகம்’ என்னும் பெயரும் உண்டு என்று கூறியிருக்க வேண்டும். இதை நன்கு உணர்ந்து கொண்ட சங்கர நமச்சிவாயர், * "பதிகக் கிளவி பல்வகைப் பொருளைத் தொகுதி யாகச் சொல்லுதல் தானே" என்னும் திவாகர-பிங்கல நிகண்டு நூற்பாவை எடுத்துக் காட்டி நல்ல விளக்கம் தந்துள்ளார். இந்த மேற்கோள் நூற்பாவும் பதிற்றுப்பத்தின் பதிகத்தைப் பார்த்தே இயற்றப் பட்டிருக்க வேண்டும். இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் அன்ருே? மற்றும், எந்தப் பழைய பாட்டியல் நூலிலும் இடம்பெருத பதிகம்’ என்னும் நூலுக்குப் பன்னிரு பாட்டியில் என்னும் நூலில் பின்வருமாறு இலக்கணம் சொல்லப்பட் டுள்ளது: "ஆசிரி யத்துறை அதனது விருத்தம் கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத்து ஈரைந்து நாலைந்து என்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்.’’ இதில், பத்துப் பாட்டு இருப்பதன்றி, இருபது பாட்டு இருப்பதும் பதிகம் என்று சொல்லப்படுகிறது. ஆகக் கூடியும், பதிகம் என்னும் பெயரைப் பிற்காலத்தார் பல கோணங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்குேடியாக இருந்தது பதிற்றுப் பத்தின் பதிகம் என்பது பெறப்படும்.