பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T334 தமிழ் நூல் தொகுப்புக் கலை இந்தப் பாடல் நூற்பெயருடன் புறத்திரட்டில் கிடைத் திருப்பதன்றி, த்ொல்காப்பியம்-புறத்திணையியலில் "இபங்கு படை யரவம்" என்று தொடங்கும் (7-ஆம்) நூற்பாவின் உரையிடையே, வாங்கல் எய்திய பெருமை’ என்னும் துறைக்கு எடுத்துக்காட்டாக இளம் பூரணராலும் தரப் பட்டுள்ளது; ஆனால், இளம்பூரணர் நூற்பெயர் குறிப் பிடாமல் பாடலை மட்டும் முழுதும் தந்துள்ளார். இதே நூற்பாவின் உரையிடையே, வென்ருேர் விளக்கம்’ என்னும் துறைக்கு எடுத்துக் காட்டாக, இந்தப் பாடலின் முதல் மூன்று அடிகளை மட்டும், பதிற்றுப்பத்து என்னும் நூற்பெய ருடன் நச்சினர்க்கினியர் கொடுத்துள்ளார். மற்றும், சீவக சிந்தாமணி - நாமகள் இலம்பகத்தில் உள்ள உருவ மாமதி: என்று தொடங்கும் (310) செய்யுளின் உரையிடையே, "முன்பு நிறைமதி போலும் முகத்தில் ஒளி, இப்பொழுது வருத்தத்தாற் கெட்ட கரிய வொளி; இருங் கண் யானை போல... - என இந்தப் பதிற்றுப் பத்துப் பாடலின் முற்பகுதியை நச்சினர்க்கினியர் எடுத்தாண்டிருப்பதும் காண்க. எனவே, "இருங்கண் யானையொடு" என்று தொடங்கும் பாடல், பதிற்றுப் பத்தில் இல்லாத இருபது பாடல்களுள் ஒன்று என்பது விளங்கும். அடுத்து, - புறத்திரட்டில் 1275-ஆம் எண் கொண்டுள்ள பதிற்றுப் பத்துப் பாடல் வருமாறு: வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமாத் தேரொடு சுரந்து நன்கல னியும் நகைசா லிருக்கை மாரி யென்ஞய் பணியென மடியாய் பகைவெம் மையி ன சையா வூக்கலை வேறுபுலத் திறுத்த விறல்வெங் தானையொடு மாரு மைந்தர் மாறுநிலை தேய மைந்துமலி பூக்கத்த கந்துகால் கீழ்ந்து கடாஅ யானே முழங்கும் இடாஅ வேணிகின் பாசறை யோனே.” 335 இந்தப் பாடல் புறத்திரட்டில் தவிர வேறு எதிலும் காணப்படவில்லை. எனவே, தெரியாதிருந்த இ ந் த ப், பதிற்றுப் பத்துப்பாடலைத் தெரிவித்த பெருமை புறத்திரட்டு ஒன்றுக்கே உரியது. மேற்காட்டிய இரு முழுப்பாடல் தவிர, இன்னொரு முழுப்பாடல் நச்சினர்க்கினியர் உரையால் அறியப்படுகிறது. தொல்காப்பியம் - புறத்திணையியலில், ' கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்’ என்று தொடங்கும் (12-ಜಮೆ? நூற்பாவின் உரையிடையே நச்சினர்க்கினியர் பின்வரு மாறு ஒரு பகுதி வரைந்துள்ளார்: "உதாரணம் முற்காட்டியவே. வேறு வேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் படையியங்கரவம் முதலியனவுக் அதிகாரத்தாற் கொள்க; அது, "இலங்கு தொடி மருப்பிற் கடாஅம் வார்ந்து 制 கிலம்புடையூஉ வெழுதரும் வலம்படு குஞ்சரம் எரியவிழ்ந் தன்ன விரியுளை சூட்டிக் همسایه கால்கிளர்ந் தன்ன கடுஞ்செலல் இவுனி கோன்முனைக் கொடியினம் வரவா வல்லோ ளுேன்வினை கடுக்குங் தோன்றல பெரிதெழுங் தருவியி னெலிக்கும் வரிபுனை நெடுங்தேர் கண்வேட் டனவே முரசங் கண்ணுற்றுக் கதத்தெழு மாதிரங் கல்லென வொலிப்பக் கறங்கிசை வயிரொடு வலம்புரியார்ப்ப நெடுமதில் கிரைஞாயிற் கடிமிளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைத் தேன் நெஞ்சுபுக லழிந்து கிலேதளர் பொரீஇ பொல்லா மன்னர் நடுங்க கல்ல மன்றவிவண் வீங்கிய செலவே." என வரும். - மேலே நச்சிஞர்க்கினியர் எடுத்துக் காட்டியுள்ள பாடன் பதிற்றுப் பத்துப் பாடலாகும். அவள் இங்கே தான்.