பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*412 தமிழ் நூல் தொகுப்புக் ు

இருசுடர் இயங்காப் பெருமூ திலங்கை

கெடுக்தோள் இராமன் கடந்த ஞான்றை பெண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற். பச்சை போர்த்த பல்புறத் தண்டை எச்சார் மருங்கினும் எயிற்புறத் திறுத்தலிற் கடற்சூழ் அரணம் போன்ற துடல்சின வேந்தன் முற்றிய ஆரே." என வரும்'.- o சண்டு உரையாசிரியர் பாடலுக்குரிய நாந்பெயரைத் -. தரவில்லை. இப் பாடல் ஆசிரியமாலையைச் சேர்ந்தது என்பது ஆறத்திரட்டின் வாயிலாகத் தெரிய வந்தது. இவ்வாறு இன்னும் பல ஆசிரியமாலைப் பாடல்கள். பில்வேறு . உரை அளிலும் வந்திருக்கலாம்: நூற்பெயர், குறிப்பிடப்பட்ள் く * LಆTಿ அவை அறியப்படாமல் இருக்கலாம். ւե:5 திரட்டில் பதினறு பாடல்கள் மட்டுந்தாமே தொகுக்கப்.பெம் றுள்ளன: அதில் வராத பாடல்கள் வேறு உரை நூல்களில் வந்திருந்தால் கண்டுபிடிக்க முடியாதல்லவா? , o

தொல்காப்பிய உரையாசிரியர்கள் நூற்பெயர் குறிப் பிடாமல் ஆசிரிய மாலைப் பாடல்களை எடுத்துக் காட்டியிருப் பினும், சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரையாசிரியர் நூற்பெயருடன் ஆசிரிய மாலைப் பாடல் பகுதியொன்றினை எடுத்துக் காட்டியுள்ளார். சிலப்பதிகாரம் - வேனிற் காதை -யில் உள்ள, . . . .

'ஒன்பான் விருத்தியுட் டலேக்கண் விருத்தி. கன்பா லமைந்த விருக்கைய ளாகி - r : « என்னும் (அடி : 25, 26) பகுதிக்கு அரும்பதவுரையாசிரியர் வரைந்துள்ள உரைப்பகுதி வருமாறு :- - 'ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தியாவது, இருபத்தொரு கோவை முதலாக நானற் கோவை யிருக்க் கிடந்த கோவைகளுள் ஒன்பான் கோவையில் மேற்செம்பாலே ஆதாரமுத லென்பது, தலையின தாரஞ் செய்யுந் தார்ம்:என்ப தறை பெற்ரும். ஒன்பான்கோவை: தொண்டுபடுதிவவின் ஆசிரிய மாலை 453." முண்டக நல்யாழ்' என ஆசிரிய மால யுள்ளுங் கண்டு. Gasrreiras” °→ - - , . . . . மேற்காட்டிய உரைப் பகுதியிலிருந்து, "தொண்டு படு: திவவின் முண்டக நல்யாழ்' என்பது, ஆசிரிய மாலைப் பாட லொன்றின் பகுதி என்பது புலளுகிறது. தொண்டு என்ருல் ஈண்டு ஒன்பது என்று பொருளாம். அதகுல்தான், ஒன்பான் கோவைக்கு எடுத்துக் காட்டாக, தொண்டுபடு திவவின் முண்டக நல். யாழ் என்பதை உரையாசிரியர் குறிப்பிட். டுள்ளார். இப்படி யொரு வழக்காறு, - தொடித் திரிவன்ன தொண்டுபடு திவவின்’ எனச் சங்க நூலாகிய மலைபடுகடாத்திலும் (வரி : 21) வந்துள்ளது. இத்தகைய ஒப்புமை யமைப்பினைக் காணுங்கால், ஆசிரிய மாலைப் பாடல்கள் சங்கத் தொகை நூற்பாடல்களைப் போலவே தொன்ம்ையுன்ட்யன என்பது புலஞ கலாம். தமிழிசை நூலா? ஆசிரிய மாலை ஒரு தமிழிசைப் பாடல் நூல் என ஒரு சாரார் கூறுகின்றனர். தொண்டு படு திவவின் முண்டக நல்யாழ்' என யாழைப் பற்றிக் கூறப்பட்டிருத்தலின் அவர் கள். அங்ஙனம் கருதுவதாகத் தெரிகிறது. யாழ் பற்றிய செய்திகள் பல நூல்களிலும் வருவதாலும், ஆசிரிய மாலையின் மற்றப் பாடல்களைக் காணுங்கால் இசை நூலாகத் தெரிய வில்லையாதலாலும், இங்ங்னம் பார்த்தால் எல்லாப் பாடல் நூல்களுமே இசை நூல்களாகும் எனச் சொல்ல வேண்டு ம்ாதலானும், இவர்தம் சருத்துப் பொருந்துமாறில்லை. ஒரு வேளை, இந்நூற் பாடல்கள் இசையமைத்துப் பாடப் பட்டிருக்கலாமோ என்னவோ! பழம் பாடல்களின் தொகுப்பு நூலாகத் தோன்றுகின்ற ஆசிரிய ம்ாலைப் பாடல்களின் ஆசிரியர்கள் பற்றியோ, காலம் பற்றியோ, தொகுப்பாசிரியர் பற்றியோ, தொகுத்த முறை பற்றியோ ஒன்றும் புலப்படவில்லை. இந்நூலைப் பற்றி ஒரளவாயினும் அறிமுகஞ் செய்து வைத்த புறத்திரட்டு வாழ்க! -