பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பெயர் கொடுத்திருக்கிரு.ர். இவற்றை யடுத்து மூன்ருவது தொகைநூலாக, கி. பி. இரண்டாம் நூற்ருண் டில், தியாழெனியானுஸ் (Diagenianus) என்பவர், பட பாடல்களைத் தொகுத்து, ஆந்தொலொழிகா (Anthologica) என்னும் பெயரில் ஒரு தொகை நூல் தந்தார், நூல் தொகுப்புக் கலையைக குறிக்கும் ஆந்தாலஜி (Anthology): என்னும் சொல்லுக்கு முதல் அடிப்படையாகிய "ஆந்தொ லொழிகா” என்னும் சொல்லை, ஒரு கிரேக்கத் தொகை நூலுக்குப் பெயராக முதல்முதல் வைத்தவர் இவரே. எனவே, தியாழெனியானுஸ் என்பவரை, ஆந்தாலஜி" என்னும் கலைச்சொற்பெயரின் தந்தையாகக் குறிப்பிடலாம். மேற்கூறிய மூன்று தொகைநூற்களுமே, பாடல்களின் முதல் சொற்களின் fLp 5 að எழுத்துக்களை அகரவரிசையில் அமைத்துத் தொகுக்கப்பட்டவையாகும். அஃதாவது, நூலுக்கு முன்னுே பின்னே செய்யுள் முதற் குறிப்பு அகர வரிசை, தனியாக அமைக்கத் தேவையில்லாமல், அந்த அகர வரிசை நூலோடு நூலாக - நூலுக்குள்ளேயே அமைக்கப் பட்டுள்ளது. இதிலிருந்து நமக்கு ஒர் உண்மை புலப்படலாம்: அதாவது - பாடல்கள் ஆசிரியர் வாரியாகவோ, அல்லது பொருள் (Subject) வாரியாகவோ, அல்லது வேறு எந்த முறையாகவோ ஒழுங்குபடுத்தி அமைக்கப்படவில்லை; அகர வரிசை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு கண்டபடி அமைக்கப்பட்டுள்ளன - என்பதுதான் அந்த உண்ம்ை. நான்காவது கிரீக் தொகை நூலாக, கி.பி இரண்டாம். ` q57 př@?söru lq.ĉu “ añ· l · qrrl_air " (Straton. of Sardis) s7o3r Ljairř, . தன்குெத்த பாலினத்தார் மாட்டுக் கொள்ளுங் காதல் 1 if L- så sår: # G, o tres & grrrr (Anthology of homo-sexuał epigrams). இந்நூல், தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்குத் தரக் குறை. வானதாகத் தோன்றுகிறதன்ருே? முள் தினியன் (lnstinian) என்னும் அரசன் காலத்தில் (கி.பி. 483-555), பல காதல் பாடல்கள், தமிழ் அகப்பொருள் நூலில் உள்ளதுபோலப் பல துறைகளாகப் பகுத்துப் பெய. ரிடப்பட்டு ஒரு நாலாகத் தொகுக்கப் பட்டன. உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 39 ? கி. பி. ஆரும் நூற்ருண்டில் (கி. பி. 570) அகத்தியஸ்' (Agathias) என்பவர், முதல்முதலாகப் பொருள் (Subject) வாரியாகப் பாடல்களைப் பாகுபாடுசெய்து அமைத்து ஒரு தொகைநூல் உருவாக்கினர். இந்த நூலின் பெயர், Circle of Agathias’ என்பதாகும். இவர் தம் பாடல்களுடன் பிற புலவர்களின் பாடல்களையும் இந்நூலில் தொகுத்தார். இது, சுவையுள்ள ஒரு சிறிய சுருக்கமான தொகை நூலாகும். இந்த நூலைப் போலவே, பத்தாம் நூற்ருண்டில், பேரறிஞர் “estrøärsivl –rrgäranĝsursiv Geró% avsiv” (Constantinus Cephalas) என்பவர், பாடல்களைப பொருள்வாரியாக வகுத் தமைத்து ஒரு நூல் தொகுத்தார். ஆனல் இது மிகவும் விரிவானது. பழைய தொகை நூல்களிலுள்ள பாடல்களுடன், மேலும் தனித் தனிப் புலவர் பலரின் பாடல்களையும் சேர்த்துத் தொகுத்து, இதனைப் பெரிய தொகை நூலாக்கிவிட்டார் செஃபலஸ். .கி. பி. 980 ஆம் ஆண்டில் பாலட்டின் மானஸ்கிரிப்ட்" (Palatine Manuscript) aroãr gold so 3.9 tugg33) toul, sra4, 5’, பட்டது. இது, செஃபலஸ் என்பவரின் விரிவான பெரிய தொகை நூலிலுள்ள பாடல்களுடன் மேலும் பல பாடல்கள் சேர்க்கப்பட்டு, ஒழுங் குறத் திருத்தியமைக்கப்பட்ட மிகப் பெரிய தொகை நூலாகும். இது, பிற்காலத்தில், அதாவது பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்ருண்டுக் காலத்தில், 15 பாகங்களாகப் பகுக்கப்பட்டு, கிரிக் ஆந்தொலொழிகா' என்னும் பெயரில் புதிய பதிப்பாக அச்சிடப்பட்டு வெளியா யிற்று. st). est.',980 –2).sv Ggfrg5 # sin il L. – Palatine Manuscript என்னும் இத் தத் தொகைதாலே யடுத்து, மாக்சிமஸ் பிளானு G – siu” (Maximus Plantides) என்னு:ம் அறிஞர், கி. பி. 1301 ஆம் ஆண்டில், செஃபலஸ் என்பாரின் தொகை நூலிலுள்ள பாடல்களுள் பலவற்றை விலக்கியும், புதியனவாகச் சில பாடல்களேச் சேர்த்தும், சிற்சில மாறுதல்கள் செய்து ஒரு நூல் தொகுத்தார். இந்தத் தொகுப்பின் பெயர் "Plaாபdean Anthologica என்பதாகும். மேலைநாட்டாரின் கவனத்திற்குக்